News Channel

பத்திரிக்கை அறிக்கை

அசாமில் நடைபெறும் அனைத்து புல்டோசர் இடிப்புகள் & மக்கள் வெளியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: மாலிக் மொஹ்தசிம் கான்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) அகில இந்திய துணைத் தலைவர்  மாலிக் மொஹ்தசிம் கான், அசாமில் மதவாத உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து, மறுவாழ்வு, நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வலியுறுத்தினார்.

புது தில்லி: 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) 
அகில இந்திய துணைத் தலைவர் 
மாலிக் மொஹ்தசிம் கான், 
அசாமில் நடைபெற்று வரும் பெருமளவிலான புல்டோசர் இடிப்பு மற்றும் மக்கள் வெளியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த வேதனையையும், கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் ஆயிரக்கணக்கான பெங்காலி வம்சாவளி முஸ்லிம் குடும்பங்களை வீடற்றவர்களாக்கியுள்ளன. மிக முக்கியமான சமுதாய, 
மத உள்கட்டமைப்புகளை அழித்துள்ளன.

ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில்  
மாலிக் மொஹ்தசிம் கான் கூறியதாவது: 

"கோல்பாரா மாவட்டத்தில் மட்டும் 2025 ஜூன்-ஜூலை மாதங்களில் சுமார் 4000 வீடுகள் இடிக்கப்பட்டதாக 
கள ஆய்வுகள் ஆவணப்படுத்தியுள்ளன. 

மேலும், பஞ்சரத்னா, குர்ஷபக்ரி, பந்தர்மத்தா, அங்கதிஹாரா-கவுர்நகர் ஆகிய இடங்களில் முன்னதாகவே இடிப்பு நடவடிக்கைகள் நடந்துள்ளன. 

கோல்பாரா, துப்ரி மற்றும் நல்பாரி மாவட்டங்களில் முதற்கட்ட புள்ளி விவரங்களின்படி, 8000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமீபத்திய மற்றும் தொடர்ந்து நடைபெறும் புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. 

மதத் தலங்களும் விடுபடவில்லை
குறைந்தது 20-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், .
40-க்கும் மேற்பட்ட மக்தப்கள்/மதரஸாக்கள் மற்றும் 
பல ஈத்கா க்கள் சேதமடைந்தும்,  இடிக்கப்பட்டும் உள்ளன.

இதனால், ஆற்று அரிப்பு மற்றும் நிர்வாகப் புறக்கணிப்பால் ஏற்கனவே பலமுறை இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் மேலும் மோசமடைந்துள்ளது. 
இதற்கு நாங்கள் ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்து, 
இதை முழுமையாகக் கண்டிக்கிறோம்.

மாலிக் மொஹ்தசிம் கான் மேலும் கூறுகையில்,
 "இந்த நடவடிக்கைகள் மனிதநேயம், 
அரசியலமைப்பு மற்றும் நியாயமான நடைமுறைகளின் ஒவ்வொரு விதிமுறையையும் மீறி இருக்கின்றன. 

70 முதல் 80 ஆண்டுகளாக இந்த நிலங்களில் வாழ்ந்து, வாக்காளர் அடையாள அட்டை, 
ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களை வைத்திருக்கும் குடிமக்களின் வீடுகள் முறையான அறிவிப்பு இன்றி இடிக்கப்பட்டுள்ளன. 

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் மட்டும் தேர்ந்தெடுத்து இலக்கு வைக்கப்பட்டு, 
பிற சமூகங்களின் குடியிருப்புகளை தொடப்படாமல் இருப்பது,
அரசியலமைப்பின் ஜனநாயகத்தில் இடமில்லாத 
ஆழமான மத வாதப் பாகுபாட்டை வெளிப்படுத்துகிறது. 

அரசு காஸ் நிலங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதிலும், 
மாநிலத்தால் முன்பு வழங்கப்பட்ட பட்டாக்களில் 
இருந்து மக்களை வெளியேற்றுவதிலும் தீவிரமான விதி மீறல்கள் நடந்துள்ளன. 

உள்ளூர் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் 
ஒதுக்கப்படாமல், 
தனியார்/தொழில்துறை நலன்களுக்கு  
மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலங்களை ஒதுக்குவது பொது நம்பிக்கையை மேலும் சிதைக்கிறது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
பின்வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறது:

1- மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் குடியிருப்புகளை இலக்காகக் கொண்டு நடைபெறும் அனைத்து இடிப்பு/வெளியேற்ற நடவடிக்கைகளை, 
வெளிப்படையான மறு ஆய்வு  உள்ளவரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

2- உணவு தானியங்கள், குழந்தைகளின் உணவு, 
மருத்துவ உதவி, கூடாரங்கள்/தார்ப் பாய்கள், 
சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் மூலம் உடனடி மனிதநேய உதவிகளை வழங்க வேண்டும்.

3- இடம்பெயர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும் காலவரையறையுடன் மறுவாழ்வு மற்றும் நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும்.
தகுதியுள்ள நிலமற்ற குடியிருப்பாளர்களை அசாமில் உள்ள அரசு காஸ் நிலங்களில் முன்னுரிமையாகக் குடியமர்த்த வேண்டும்.

4- கடந்த மற்றும் தற்போதைய இடிப்பு நடவடிக்கைகளின் சட்டபூர்வத்தன்மை, தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு மற்றும் மதவாதப் பாகுபாடு குறித்து  நீதித்துறை அல்லது உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
அதன் ஆய்வு விவரங்களை  வெளியிட வேண்டும்.

5- சேதமடைந்த பள்ளிவாசல்கள், மக்தப்கள்/மதரஸாக்கள் மற்றும் ஈத்காக்களுக்கு உள்ளூர் சமூகங்களுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு மற்றும் மறுகட்டுமான உதவி வழங்க வேண்டும்.
முறையான நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
முன்கூட்டிய எழுத்துப்பூர்வ அறிவிப்பு, 
கேட்கப்படும் வாய்ப்பு, 
அகற்றப் படுவதற்கு முன் மறுவாழ்வு, 
அனைத்தும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும்.

JIH துணைத் தலைவர் மாலிக் மொஹ்தசிம் கான் 
மேலும் கூறுகையில்: 
"நாங்கள் அசாம் மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறோம். தேசிய மனித உரிமைகள் ஆணையம், 
தேசிய சிறுபான்மையினர் ஆணையம்,
சம்பந்தப்பட்ட நாடாளுமன்றக் குழுக்கள்,
உண்மை கண்டறியும் குழு உடனடியாக 
பயணங்கள் மேற்கொண்டு  இந்த விதி மீறலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை உறுதி செய்ய வேண்டும் 
என்று வலியுறுத்துகிறோம். 
புல்டோசர்கள் அரசு நிர்வாகத்தின் முகமாக மாறும்போது, ஜனநாயகமும் அரசியலமைப்பின் மதிப்புகளும் 
பின்னுக்குத் தள்ளப்படுகின்றன என்று கூறினார்.