"பத்திரிகை அறிக்கை"
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை எதிர்கொள்ளும் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேசிய செயலாளர் ரஹ்மதுன்னிஸா.
புது தில்லி: ஒடிசாவின் பாலசோர், ஃபகிர் மோகன் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், பாலியல் தொந்தரவு வழக்கில் நீதி
கிடைக்காததால்,
தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்திற்கு
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேசிய செயலாளர்
திருமதி ரஹ்மதுன்னிஸா அப்துல்ரசாக்
ஆழ்ந்த வேதனையையும்
கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில்,
திருமதி ரஹ்மதுன்னிஸா கூறியதாவது:
"இது வெறும் நிர்வாகத் தோல்வியல்ல,
நமது நிறுவனங்களின் ஒழுக்க வீழ்ச்சியாகும்.
இதனை நாம் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
ஒரு இளம் பெண், தொடர்ந்து உதவி கோரியும்
நீதி கிடைக்காமல் இவ்வாறு வேதனையான முடிவிற்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் குற்றமாகும்.
பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும்,
ஆதரிக்கவும் செய்யும் நிலை தோல்வியடைந்துவிட்டது.
மனித மாண்பின் புனிதத்தையும்,
நீதியையும் நாம் உறுதியாக நம்புகிறோம்.
பாதிக்கப்பட்டவருக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு அவர்களின் பதவி, பெயர்,புகழ்,பொருளாதார நிலை பார்க்காமல் தண்டனையை பெற்றுத் தருவது சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அவசியமாகும்.
இந்த சம்பவம் தொடர்பாக
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேசிய செயலாளர்
தேசிய செயலாளர் தனது
கோரிக்கைகளை முன்வைத்தார்.
1. இந்த சம்பவம் குறித்து சுதந்திரமான நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2. கல்வி நிறுவனத் தோல்விக்கு பொறுப்பானவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.
3. கல்வி நிறுவனங்களில் பாலியல் தொந்தரவை வெளிப்படையாகவும் பொறுப்புணர்வுடனும் எதிர்கொள்ள வலுவான நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு, மரியாதை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து குடிமக்களும் செயலூக்கத்துடன் பங்காற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.
பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு மற்றும் பாலியல் குற்றங்களை எதிர்கொள்ளும் நமது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கடுமையான சட்டங்கள், சமுதாயத்தின்
ஒழுக்க மறுசீரமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும்.