News Channel

இரங்கல் செய்தி

பஷமிலாரம் விபத்து தொடர்பாக இரங்கல் செய்தி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 

தெலுங்கானா மாநிலம் 
பஷமிலாரம்  பகுதியில் உள்ள சிகாசி ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்  உயிரிழந்த 42 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படவும், 
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நாம் பிரார்த்தனை செய்கிறோம்.

கண்களை கலங்கவைக்கும் துயர சம்பவம் மீண்டும் ஒரு முறை
தொழிற்சாலை பாதுகாப்பில் உள்ள மோசமான குறைபாடுகளை வெளிச்சம் காட்டியுள்ளது. 

வெடிப்பின் தீவிரமும், 
ஏற்பட்ட அழிவுகளின் அளவும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்ததைத் தெளிவாகச் சொல்கின்றன. 

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதமின்றி நேர்மையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விசாரணை முடிவுகள் பொதுமக்களுக்கு தெரிவிக்க  வேண்டும், 
மற்றும் தவறுக்குப் பொறுப்பானவர்கள் 
மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிற்துறையின் வளர்ச்சிக்கும், வர்த்தக இலாபத்துக்கும் மேலாக மனித உயிரின் மதிப்பே முதன்மையாக இருக்க வேண்டும். 

தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது எந்தச் சூழ்நிலையிலும் விலக்க முடியாத ஒன்று. 
துயரத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களது முழுமையான ஆதரவையும் தெரிவிக்கிறோம். 

காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படவும், காணாமல் போனவர்கள் மீட்கப்படவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதிய இழப்பீடும் உதவிகளும் அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்தச் சம்பவம் தொழிற்துறை பாதுகாப்பு விதிமுறைகளில் முழுமையான சீர்திருத்தம் தேவை என்பதை நமக்குச் சுட்டிக் காட்டும் விழிப்புணர்வாக அமைய வேண்டும். 

இனிமேல் இவ்வாறான உயிரிழப்புகள் ஒருபோதும் நிகழக்கூடாது. 
இந்த கோர நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன.

வெளியீடு:
பொறியாளர் சலீம் இன்ஜினியர்
துணைத் தலைவர், 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
புதுடெல்லி.