பாலஸ்தீனத்தை ஆதரிப்பதே நம் தேசத்தின் நலன்
- சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி.
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி,
பாலஸ்தீனத்தின் ஆதரப்பதே இந்தியாவின் சிறந்த நலன் என குறிப்பிட்டுள்ளார்.
21 அக்டோபர் 2023 அன்று ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் புது தில்லி தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர நிகழ்ச்சியில்,
காஸா மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சு குறித்து தனது கருத்தை ஜமாஅத் தலைவர் வெளிப்படுத்தினார்.
“பாலஸ்தீனப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி என்று நான் உணர்கிறேன்.
போராட்டங்களையும் ஊர்வலங்களையும் அரசுகள் நிறுத்தலாம்.
இப்பிரச்னைத் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்த முயற்சிக்கின்றனர்.
நாமும் அதிக முயற்சி செய்தோம். ஆனால், ஊர்வலமோ, பொது நிகழ்ச்சிகளோ நடத்த கூடாத நிலையை டெல்லியில் ஏற்படுத்தி உள்ளனர்.
அவர்கள் நம்முடைய இந்த நடவடிக்கைகளை நிறுத்தலாம். ஆனால் பாலஸ்தீன பிரச்சனை பற்றிய உண்மையான தகவல்களை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலம் மக்களைத் தொடர்பு கொண்டு நீங்கள் பரப்ப வேண்டும்.
பிரதான ஊடகங்கள் பெரிய அளவில் பொய்யையும், தவறான தகவலையும் பரப்பி வருகின்றன.
பாலஸ்தீனப் பிரச்சனை மீது ஒரு குறிப்பிட்ட பார்வையை நாடு முழுவதும் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், உண்மையான தகவல்களை இந்நாட்டு மக்களின் முன் வெளிக்கொணர வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.” என்று சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி கூறினார்.
ஊடகங்களின் இத்தகைய அறமற்ற செயல்கள் நம் தேசத்தின் செழுமையான விழுமியங்களின் மீதான தாக்குதல் என ஜமாஅத் தலைவர் கூறுனார்.
மேலும், பாலஸ்தீனம் தற்போது உலகில் மிகவும் ஒடுக்கப்பட்ட தேசம்.
நவீனகால வரலாற்றில் இஸ்ரேல் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான நாடு என்றும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
பாலஸ்தீனியர்களுக்கு அது இழைக்கும் கொடுமைகளுக்கு இணையாக எங்குமே நடந்ததில்லை.
நாகரீக உலகம் வெறுக்கும் அனைத்து தீமைகளின் ஒட்டுமொத்த உருவம் இஸ்ரேல்.
நவீன உலகம் நிறுவப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் மதிப்புகள் அனைத்தும் இன்று பாலஸ்தீனத்தில் மீறப்படுகின்றன. ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் அல்லது சமத்துவம் போன்ற விழுமியங்கள் அனைத்தும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் கைகளால் நசுக்கப்படுகின்றன.
எனவே பாலஸ்தீனப் பிரச்சனை ஒரு நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரச்சனை இது.
நமது விழுமியங்களை இப்படி அழிக்க அனுமதித்தால்,
கடந்த இருநூறு ஆண்டுகளில் நாம் சாதித்ததை,
காஸாவுடன் சேர்த்து புதைத்து அழித்து விடுவோம்”
என்று சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி கூறினார்.
பாலஸ்தீனர்களின் அவல நிலைக் குறித்து சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி பேசுகையில்,
“ஆறு மில்லியன் மக்கள் பாலஸ்தீனத்திலும், அதே அளவு மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள முகாம்களிலும் கடந்த 75ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். குறுகிய கூடாரங்களிலும், திறந்தவெளி சிறைச்சாலைகளிலும் பாலஸ்தீனர்கள் பாதுகாப்பின்றி வாழ்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் அவர்களது வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் இஸ்ரேலின் குண்டுகளால் தரைமட்டமாக்கப்படுகின்றன. குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் சிறைவைக்கப்படுகிறனர், கொல்லப்படுகின்றனர்.
இது பல ஆண்டு காலங்களாக தொடர்ந்து வருகின்றன. அமைதியாக வாய்திறக்காமல் இந்த கொடுமைகளை வேடிக்கைப் பார்த்து கொண்டிருப்பது முழு மனித நாகரிகத்திற்கு அடித்த சாவு மணியாக ஒலிக்கிறது.” என கூறினார்.
நம் தேச நலனைப் பற்றி ஜமாஅத் தலைவர் பேசுகையில், “பாலஸ்தீனத்தை ஆதரிப்பது நமது தேச நலன் என்பதை நம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். இப்பிரச்னை மனித உரிமைகள் பற்றியதுமட்டுமல்ல,
நமது தேச நலன் சார்ந்ததுமாகும். எந்த விழுமத்தின் அடிப்படையில் நமது தேசம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதோ,
எந்த நியாயத்தின் அடிப்படையில் நமது சுதந்திரப் போரில் நாம் போராடினோமோ அவைகள்தான் பாலஸ்தீனிய போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோருகின்றன.
பாலஸ்தீனப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றால், பாலஸ்தீனத்தில் ஒடுக்கப்பட்டவர்களை ஆதரிக்கவில்லை என்றால், நம் நாட்டின் கொள்கைக்கு, வரலாற்றுக்கு, தேசத்தின் போற்றத்தக்க மரபுக்கு எதிராக நாம் கிளர்ச்சி செய்கிறோம் என்றே பொருள்.
இவை அனைத்தும் மிகவும் உறுதியான முறையில் நாட்டு மக்களுக்கு வலுவாக தெரிவிக்கப்பட வேண்டும்” என்றார்.
தெற்குலக நாடுகளின் தலைமைத்துவத்தை ஏற்க இந்தியாவிற்கு ஒரு பொன்னான வாய்ப்பு என்பதை ஜமாஅத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
“அமெரிக்கா வளர்ந்த நாடுகள் நம் நாட்டை அதன் தலைமையாக ஏற்காது.
இந்த வளரும் நாடுகளை நாம் பல ஆண்டுகளாக வழிநடத்தி வருகிறோம்.
பாலஸ்தீனப் பிரச்னை ஒரு எதிர்ப்பாராத வாய்ப்பை வழங்கியது.
மேலும் நமது நாடு தெற்குலகை வழிநடத்தி,
ஏகாதிபத்தியம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான மிக சக்திவாய்ந்த குரலாக மாறியிருக்கலாம்.
அதை இன்றும் செய்யலாம்.
இந்த வாய்ப்பை இழப்பவர்கள் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றனர். இதையெல்லாம் நாட்டு மக்களுக்கு மிக உறுதியான முறையில் எடுத்து சொல்ல வேண்டும்.
அப்போது நம் நாட்டில் பாலஸ்தீன பிரச்னை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும்.
பாலஸ்தீன போராட்டத்திற்காக நாம் எப்போதும் ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க பங்கினை செலுத்தி வருகிறோம்.
மீண்டும் ஒருமுறை அதை செய்தால்,
அதுவே பாலஸ்தீன சகோதரர்களுக்காக நாம் ஆற்றக்கூடிய மிகப்பெரிய சேவையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.” என சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி கூறினார்.
முன்னதாக பாலஸ்தீனம் தொடர்பான சிறப்பான கருத்தைக் கூறிய கே.சி.தியாகிக்கு சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி நன்றி தெரிவித்தார்.
திரு தியாகியின் முயற்சியை வெகுவாக அவர் பாராட்டினார்.
“நம் நாட்டில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மிகவும் சக்திவாய்ந்த குரலாக நீங்கள் இருக்கின்றீர்கள். அதற்காக நாங்கள் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
எம்.பி.க்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பாலஸ்தீன விவகாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருவதை நாங்கள் காண்கிறோம். எங்களுடைய பொறுப்பை நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்.
எனவே எங்களுடைய அனைவரது நன்றிக்கும் நீங்கள் (கே.சி. தியாகி சாஹப்)உரித்தானரவ்ர்கள்.” என சையத் சஆததுல்லாஹ் ஹுசைனி கூறினார்.
Issued by:
K.K. Suhail
National Secretary, Media Dept. Jamaat-e-Islami Hind, HQRS
Mobile: 7290010191
Address: D-321, Abul Fazl Enclave, Jamia Nagar, Okhla,
New Delhi- 110025