News Channel

NIA வின் பொய் வழக்குகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கோவை மாவட்ட இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு - பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு !

NIA வின் பொய் வழக்குகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (24 ஜூன் 2025) நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் NIA வால் பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி இளைஞர்களின் குடும்பத்தினரும், இப்பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு தங்களது வாழ்வில் நடைபெற்று வரும் இன்னல்களை கண்ணீரோடு பகிர்ந்தனர். 

இந்தியாவில் தமிழகம் அனைத்து தளங்களிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டம் அமைதியாக சிறப்பான பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதன் அமைதியை, வளர்ச்சியை குலைக்க வேண்டும், வரும் முதலீடுகளில் இடையூரு செய்யவேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் இந்து பெறும்பான்மைவாத சக்திகள் செயலாற்றிவருகிறது.

அதன் தொடர்ச்சியாகத்தான், அமைதிக்கு எடுத்துகாட்டாய் திகழும் கோவை மாவட்டத்தை பயங்கரவாதிகளின் புகலிடம், தீவிரவாதிகளின் கூடாரம் என்கிற பொய் பிரச்சாரம். இப்பொய் பிரச்சாரத்திறக்கு மறைமுகமாக உதவிகளை செய்து வருகிறது தேசிய புலனாய்வு முகமை (NIA).

மதசார்பற்ற கட்சிகளின் ஆட்சிகாலத்தில்  திறமையாக, நீதீயாக, சுதந்திரமாக செயலாற்றி வந்த NIA, தற்போது பாசிச கொள்கைகளை அமுல்படுத்தும் பா.ஜ.க வின் அதிகாரிகள் பிரிவு அணியாக செயலாற்றி வருகிறதோ என எண்ணத்தோன்றும் அளவுக்கு செயல்படுகிறது.

 தொடர்ச்சியாக தமிழகத்தில், அதிலும் குறிப்பாக கோவையில் சோதனை என்கிற பெயரில் இஸ்லாமியர்களை தீவீரவாதிகளாக சித்தரித்து செய்திகளை வெளியிடுவது, பொய் வழக்குகளை உண்மைபடுத்த பொய்சாட்சி சொல்லவதற்கும் அப்ரூவர் ஆகிடவும்  மிரட்டுவது, ஒத்துழைக்கவில்லையென்றால் பொய் வழக்கு போடுவது, வழக்கு விசாரணைகளை வேண்டுமென்றே நீதீமன்றங்களில் தாமதபடுத்துவது, பாதிக்கபடும் குடும்பதினர்கள் - உறவினர்களை விசாரணையின் பெயரால் அலைகழிப்பது, வழக்கு நடத்த உதவும் தன்னார்வர்களை கண்காணிப்பு எனும் பெயரில் முடக்குவது போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது என தொடர்ச்சியாக இஸ்லாமிய விரோத எண்ணத்துடன் NIA செயலாற்றி வருவது கண்டணத்திற்குரியது. 

மக்களின் வரிபணத்தில் ஊதியம் பெறும் NIA அதிகாரிகள் மக்களின் அமைதிக்காக, நாட்டின் நன்மைக்காக பணியாற்றவேண்டுமே தவிர, பா.ஜ.க-வின் கொள்கைகளை நடைமுறைபடுத்த செயலாற்ற கூடாது.

‘15 நாளில் அரபி கற்றுத்தரப்படும்’ என நடத்தபடும் மொழி கற்பிப்பு மையத்தில் அரபி மொழி கற்ற ஒரு நபர் தவறு செய்தார் என்ற குற்றசாட்டினை காரணமாகக் காட்டி, 7 ஆண்டுகள் தொடங்கி 10  ஆண்டுகள் வரை இஸ்லாமியர்களின் புனித குர்ஆன் மனனம், கலாச்சாரம், மார்க்கநெறிகள் மற்றும் உலகக் கல்விகளை  சான்றிதழுடன் கற்றுக்கொடுக்கும் நூற்றாண்டுகளைக் கடந்த இஸ்லாமிய குருகுலங்களான மதரசாக்களை, அரபிக்கல்லூரிகளை தொடர்புபடுத்தி களங்கப்படுத்தும் கருத்துருவங்களை ஏற்படுத்துவது கடும் கண்டணத்திற்குரியதாகும்.

தமிழக அரசும், மதசார்பற்ற கட்சிகளும் நாட்டுநலன் கருதி இப்பிரச்சினையில் மவுனம் கலைக்கவேண்டும்.

இதில் இருக்கும் தவறான உள்நோக்கங்களை கொண்ட NIA-வின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்க வேண்டும், சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.