மணப்பாறை வட்டார உலமாக்கள் சபை தலைவர் சந்திப்பு.
அக்டோபர் 23-(23.10.2023)
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மணப்பாறை கிளையின் நிர்வாகத்தின் சார்பில் மணப்பாறையில் நடைபெற்ற உலமாக்கள்
நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவரை சந்திப்பதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னதாக தேர்தலில்
மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசலைச் சார்ந்தஉலமா இக்பால் அவர்கள் தலைவராகவும்
புத்தாநத்தம் கிழக்குப் பள்ளி சேர்ந்த மௌலானா ரெஃபாய் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
ஜமாத்தை இஸ்லாமி ஹிந்த் மணப்பாறை கிளை சார்பாக தலைவர் மற்றும் செயலாளர் அவர்களை சந்தித்து ஜமாத்தின் புத்தகங்கள் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டு அதற்காக அவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
மணப்பாறை கிளையின் தலைவர் ஜபருல்லா அவர்கள் மற்றும் கிளையின் உறுப்பினர்கள் தலைவர் மௌலவி இக்பால் அவர்களை சந்தித்து இதுதான் இஸ்லாம் என்ற அமைப்பின் புத்தகத்தை வழங்கினர்.
பின்னர் அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடல் நடைபெற்றது.
ஜமாத்துல் உலமா சபை ஏற்பாடு செய்யும் அனைத்து விதமான நற்காரியங்களில் எல்லாம் ஒத்துழைப்பு தருவது என்று அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் மணப்பாறை பகுதி வாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக ஜமாத்தே இஸ்லாமி முன்னெடுக்கும் பணிகளில் தாங்களும் கலந்து கொள்வதாக தலைவர் உறுதி கூறினார்.
நிகழ்வின் இறுதியில் அனைவருக்காகவும் இறைவனிடம் இரைஞ்சுதல் செய்யப்பட்டது.