News Channel

அல்லாஹ்வின் உதவியாளராக திகழுங்கள்

அல்லாஹ்வின் உதவியாளராக திகழுங்கள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அபிமானிகளுக்கான நிகழ்ச்சி மதரஸா தாருஸ்ஸலாமில் 26.05.2025 திங்கட்கிழமை மாலை 6.30 மணி முதல் 9.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

நகர தலைவர் ஜனாப்  சிபகத்துல்லாஹ் தலைமை வகித்தார்.

சகோ: சாஜித் அஹ்மத் இறைவசனம் ஓதினார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மண்டல அமைப்பாளர் ஜனாப் அப்துல் ஹமீத் அவர்கள் முஸ்லிம் அடிப்படை கடமை எனும் தலைப்பிலும்.

 டாக்டர். முஹைதீன் அவர்கள் கூட்டமைப்பின் அவசியம் ஏன் என்ற தலைப்பிலும் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்.

இறுதியாக சகோ இப்ராஹீம் நன்றி கூறினார்.
 
நிகழ்ச்சியை சகோ. முஹம்மத் மாஸ் வழிநடத்தினார். 

இறுதியாக இஷா தொழுகைக்கு பிறகு அனைவருக்கும் உணவு பரிமாறபட்டது.

ஜமாத் உறுப்பினர் மற்றும் ஊழியர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். 

எல்லா புகழும் இறைவனுக்கே