"பத்திரிக்கை செய்தி"
புதுடெல்லி:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் (JIH) துணைத் தலைவர் பேராசிரியர் சலீம் இஞ்சினியர்,
இந்திய அதிகாரிகளால் ரோஹிங்யா அகதிகள் மனிதாபிமானமற்ற முறையில் நாடு கடத்தப்படுவது குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் பேராசிரியர் சலீம் இஞ்சினியர் கூறியதாவது:
43 ரோஹிங்கா அகதிகள், இவர்களில் பெண்கள், குழந்தைகள், மூத்தவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் அடங்கியிருக்கின்றனர்,
அவர்கள் இந்திய அதிகாரிகளால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டதாக பல நம்பகமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
8 மே 2025 அன்று, புதுடெல்லியிலிருந்து போர்ட் ப்ளேருக்கு கண்சளை கட்டி வைத்து கைகளை கட்டி கொண்டு செல்லப்பட்ட இவர்கள்,
பாதுகாப்பான நாட்டிற்கு அனுப்பப்படுவதாக பொய் கூறி,
மியான்மர் கடற்கரைக்கு அருகே சர்வதேச நீர்பகுதியில் விட்டுவிடப்பட்டனர்.
கரையை நோக்கி நீந்திய அவர்கள்,
இறுதியில் தப்பித்து வந்த அதே மியான்மர் நாட்டில் காணப்பட்டனர்.
இது உண்மையாக இருந்தால், இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் மனிதாபிமானக் கடமைகளிலிருந்து விலகி செல்லும் ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும் வெட்கக்கேடான நடவடிக்கையாகும்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் மேலும் கூறினார்:
இந்திய அரசு ஐ.நா. சித்திரவதை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.
இந்த ஒப்பந்தம், உயிர் அல்லது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ள நாட்டிற்கு திரும்ப அனுப்புவதை (refoulement) தெளிவாக தடை செய்கிறது.
ரோஹிங்யகாவினர் இனப்படுகொலை பாதிப்புக்குள்ளானவர்கள் என்பதை சர்வதேச நீதிமன்றம் ஏற்கனவே அங்கீகரித்துள்ளது.
எந்தவொரு பெயரிலும் அவர்களை மியான்மருக்கு நாடு கடத்துவது,
சர்வதேச சட்டத்தையும் நெறிமுறைப் பொறுப்பையும் மீறுகிறது.
நாடு கடத்தப்பட்டவர்கள் ஐ.நா. அகதிகள் முகமையான UNHCR-ல் பதிவு செய்யப்பட்டவர்கள்.
அகதி அடையாளம் இருந்தும் அவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தியது, சர்வதேச மனிதாபிமான தரங்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவின் வரலாற்றுப் பாரம்பரியத்தை முழுமையாக புறக்கணிப்பதாகும்.
குற்றவாளிகளைப் போல மனிதர்களை நாடு கடத்துவது,
மேலும் கடலில் அவர்களின் உயிரை பணயம் வைப்பது மனிதாபிமானமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்திய அரசு உடனடியாக ரோஹிங்யா அகதிகளின் பலவந்த நாடு கடத்தலை நிறுத்தவும்,
குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும்,
இந்த மீறல்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்க வேண்டும் என்று
நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21,
உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திர உரிமையை உத்தரவாதம் அளிக்கிறது மற்றும் இந்த உரிமைகளின் தன்னிச்சையான பறிப்புக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த உரிமை மீறப்பட்டிருந்தால் நீதித்துறை உடனடியாக தலையிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்.
தேசிய உதவி செயலாளர், ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்
புதுடெல்லி - 110025