• திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

News Channel

பத்திரிக்கைச் செய்தி - ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளது

பத்திரிக்கைச் செய்தி

காசா மருத்துவமனை மீதான மிருகத்தனமான தாக்குதல் மற்றும் தொடரும் தாக்குதல்கள் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளது

18 அக்டோபர் 2023.

புது தில்லி: காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ்  ஹுசைனி அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், "மத்திய காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் கொடூரமாக குண்டு போட்டு தாக்கியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இத்தாக்குதலில் சுமார் 1000 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இம்மருத்துவமனை வளாகம் முழுவதும் பெண்களும் குழந்தைகளும் நிரம்பியிருந்தனர். அங்கிருந்து உடனடியாக வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டிருந்தது.

இத்தாக்குதல் திட்டமிட்ட இனபடுகொலை என்றும், மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய அழிவுச் செயல் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் அனைத்துப் போர் சட்டங்களையும், அடிப்படை மனித உரிமைகளையும் 
வெளிப்படையாக மீறும் வகையில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைத் தொடர்ந்து குறிவைத்து வருகின்றன.  

மௌன பார்வையாளர்களாக இருக்கும் சக்தி வாய்ந்த நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கொடூரமான போர் குற்றங்களிலிருந்து ஒதுங்கி நிற்க முடியாது. அவர்கள் கைகளில் பாலஸ்தீனத்தின் அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் இரத்தம் படிந்துள்ளது.

அப்பிராந்தியத்தில் உடனடி போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் மற்றும் காசாவின் பொதுமக்கள் மீது திட்டமிட்ட குண்டுவீச்சுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இஸ்ரேலின் குற்ற நடவடிக்கைகளை தண்டிக்கப்படாமல் விடக்கூடாது.

அண்மையில் இஸ்ரேல் செய்த பல்வேறு போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள அதன் அரசியல் மற்றும் இராணுவத் தலைமையை ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் தீவிரமாக செயல்பட்டு பணிய வைக்க வேண்டும்.

பாலஸ்தீனியர்களை நாம் தோல்வியடையச் செய்தால், தற்போதைய படுகொலைகளை நிறுத்தாவிட்டால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது" இவ்வாறு அவர் கூறினார்.

வெளியீடு:
கே.கே.  சுஹைல்
தேசிய செயலாளர், ஊடகத்துறை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 
புது தில்லி - 110025