News Channel

பத்திரிக்கை அறிக்கை

ஊடக அறிக்கை..

அமைதி மற்றும் நீதியை நிலைநாட்ட தேசம் மற்றும் சர்வதேச அளவில் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்:
ஜமாஅத் தலைவர் வலியுறுத்தல்

புது தில்லி, ஏப்ரல் 08: 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH ) சார்பில் பிரமாண்டமான ஈத் மிலன் (பெருநாள்) சிறப்பு நிகழ்ச்சி இந்திய சர்வதேச மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் 15க்கும் மேற்பட்ட நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள், 
பல்வேறு சமயத் தலைவர்கள், கொள்கையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக ஆளுமைகள், அரசியல், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டன. 

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்புகளைச் செய்த பிரமுகர்களும் கலந்து கொண்டனர். மொத்தமாக, சுமார் 350 க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

சமூகத்தின் முக்கியமான, செல்வாக்குள்ள ஆளுமைகளுடன் ஈத் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும், அமைதி மற்றும் நீதியின் செய்தியைப் பரப்பி சிறந்த சமூகத்தை உருவாக்குவதுமே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி முக்கியமான சில விஷயங்கள் மீது கலந்து கொண்டவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசினார்.
மேலும் மக்களை இணைக்கும் சிறந்த பாலமாக பண்டிகைகள்  உள்ளன என அவர்  கூறினார்.

ஆனால் தற்போது சிலர் ஒற்றுமையை சீர்குலைத்து பிரிவினையை உருவாக்க பண்டிகையைப் பயன்படுத்துவது வருத்தத்திற்க்குரியது. மக்கள் பண்டிகைகளைக் கண்டு பயப்படத் தொடங்கும் அளவுக்கு ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், 
ஈத் மிலன் போன்ற நிகழ்ச்சிகள் முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதாக இருக்கின்றன. 

பண்டிகைகளை பிரிக்கும் சுவர்களாக மாற்றும்  முயற்சிகளை அவர்  சுட்டிக் காட்டினார்.

ஒருவரையொருவர் சந்திப்பதோடு மட்டுமல்லாமல், நீதிக்காக ஒன்றிணைந்து பாடுபடுகின்ற,
சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்துகின்ற ஒரு வாய்ப்பாக பண்டிகைகள் மாற வேண்டும். 

 பல்வேறு நாடுகள், சித்தாந்தங்கள், சமயங்கள், கொள்கைகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த மக்கள் இக்கூட்டத்தில் ஒன்றுகூடுவது சமூகத்திற்கு ஒரு பெரிய செய்தியை தருகிறது. 

இத்தகைய உரையாடல்கள் பெருநாள் பண்டிகை நோக்கதிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. சமூக ஒற்றுமை, நல்லிணக்கம், ஒருமைபாடு ஆகியவற்றை பெருநாள் வலியுறுத்துகிறது.

வக்ஃப் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ஜமாஅத் தலைவர் அவர்கள் இது ஒரு அநீதியான சட்டம் என்றும், இதற்கு எதிராக தேசமுழுவதும் மக்கள் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவிக்க  முன்வர வேண்டும் என்றும் கூறினார். 

இந்த மசோதா சமயப் பிரிவினை மற்றும் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், 
நாம் அனைவரும் இதை எதிர்த்துப் போராட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில், 
பாலஸ்தீன பிரச்சினையில் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான முன்னேற்றத்திற்காக பல நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகளிடமும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

பாலஸ்தீனத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக சர்வதேச சமூகமும், உலகில் உள்ள ஒவ்வொரு நாடும், நபரும் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார். அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட ஒன்றிணைந்து செயல்படுவது நம் அனைவரின் பொறுப்பாகும் என அவர் கூறினார்.

வெளியீடு:
சல்மான் அஹ்மத் 
தேசிய உதவிச் செயலாளர், ஊடகத் துறை, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்
புது தில்லி.