கும்பகோணம் மறை மாவட்டம் மற்றும் கும்பகோணம் சத்தியச் சோலை இணைந்து நடத்திய சமய நல்லிணக்க நோன்பு திறப்பு (இப்தார்) நிகழ்வு 18.3.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
கும்பகோணம் மறை மாவட்ட மேதகு ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
சமய நல்லிணக்க நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்வில் சென்னையிலிருந்து வருகை புரிந்த ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் மௌலானா மௌலவி முஹம்மது ஹனிஃபா மண்பையி மற்றும் திருவடி குடிகள் சுவாமிகள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கும்பகோணத்தை சுற்றியுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள், சமுதாய சகோதரர்கள், சகோதரிகள், மாணவர்கள் என்று 100 க்கு மேலானவர்கள் கலந்து கொண்டார்கள்
இந்நிகழ்ச்சியை கும்பகோணம் புனித ஜான் டி பிரிட்டோ மறை நிலையத்தில் நடைபெற்றது.