எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் 16. 03.2025 ஞாயிறு அன்று ஜும்மா பள்ளிவாசல் ஆவாரம்பட்டியில் *சகோதர சமுதாய சொந்தங்களுடன் ஓர் இனிய மாலைப்பொழுது* எனும் அமர்வில் JIH மணப்பாறை கிளை மற்றும் காதர் கட்டளை ஆவாரம்பட்டி இணைந்து நடத்தும் இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜனாப் H.சிராஜூதின் கவிஞர் அல்ஹாஜ்.முஹம்மது அலி,முனைவர் M. A.அக்பர் ஷா அறிவியலாளர் ஜனாப் K. முஹம்மது (முத்தவல்லி) ஜனாப் SKM ஜபருல்லா தக்வா பள்ளிவாசல் பொறுப்பாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை உரையை G. சையது முகமது JIH திருச்சி மண்டல பொறுப்பாளர் அவர்களும் சிறப்பு உரையை பேராசிரியர் N.அமானுல்லா (இயக்குனர் அஸ்ஸலாமு இஸ்லாமிய கல்லூரி திருச்சி) அவர்களும் செவ்வனே உரையாற்றினார்.
வாழ்த்துரை வழங்குவதற்காக அருட்தந்தை C. பாஸ்டின் அணி டோக்ராக்(பங்குத்தந்தை ஆவாரம்பட்டி) அவர்களும் ஊர் மணியம் T. அருளப்பன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் ஆவாரம்பட்டியை சார்ந்த பொதுமக்களும் மற்றும் ஊர் ஜமாத்தார்களும் கலந்து கொண்டார்கள்.
மாலை சுமார் 5.30 மணி அளவில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் இஸ்லாமிய மற்றும் சகோதர சமுதாய சொந்தங்களுடன்தொடர்பு பற்றியும் அவர்களுடனான உறவு பற்றியும் குர்ஆன் மற்றும் நபிகளாரின் பண்புகள் பற்றியும் அழகான முறையில் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
அருட்தந்தை அவர்கள் கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியும் மேலும் இஸ்லாத்தில் உள்ள கடமைகள் பற்றியும் சிறப்பாக விளக்கி கூறினார்கள்.
சிறப்புரையாற்றிய பேராசிரியர் அமானுல்லா அவர்கள் இஸ்லாம் நோன்பு பற்றிய விளக்கங்களையும் மேலும் இஸ்லாத்தின் மீது உள்ள புரிதல்களையும் மக்களுக்கு எளிமையாக புரியும் வழியில் அருமையாக உரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியாக கவிஞர் அல்ஹாஜ் முஹம்மது அலி அவர்கள் நன்றியுரை கூறினார்கள் மேலும் இறைவனிடம் சிறப்பு பிரார்த்தனை JIH மணப்பாறை கிளையின் தலைவர் அவர்களால் இறைஞ்சப்பட்டது.
நிகழ்ச்சியில் இஸ்லாமிய மற்றும் சகோதர சமுதாய சொந்தங்களுடன் சுமார் 120 பேர் கலந்து கொண்டார்கள். நோன்பு திறக்கும் நிகழ்வுடன் இனிதே நிறைவுற்றது.