*சமூகங்களுடன் இஃப்தார்*
*7-ஆம் அமர்வு*
(வணிகர்களுடன் இஃப்தார்)
இன்று மன்னார்குடி வியாபாரிகளுக்காக இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மன்னார்குடி வர்த்தக சங்க நிர்வாகிகள் & வணிகர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் தொடர்பில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பிற வியாபாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த அமர்வினை மன்னார்குடி Rifa பொறுப்பாளர் சகோ.ஆனந்தம் அலியார் தலைமை வகிக்க, பெரிய பள்ளிவாசல் தலைவர் சகோ.அப்துர் ரஹீம் முன்னிலை வகிக்க Jih கிளை பொறுப்பாளர் சகோ.NM. மன்சூர் அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
கிளை Sio பொறுப்பாளர் மவ்லவி.அப்துல் முக்ஸித் ஸலாமி அவர்கள் திருமறை ஓத துவங்கி வைத்தார். *திருச்சி அஸ்ஸலாம் இஸ்லாமிய கல்லூரி இயக்குநர், பேரா.N. அமானுல்லா* அவர்கள் சிறப்பு உரை நிகழ்த்தினார்.
பன்மைச்சூழலில் தமிழ் சமூகத்தின் இயல்புகளும் சிந்தனைகளும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைப் பற்றியும் முஸ்லிம்களுடைய நம்பிக்கைகள் குறித்தும் சுவைபட பேசியது பார்வையாளர்களின் கவனத்தை பெற்றது.
நோன்பு திறப்புக்கு பிறகு கலந்துரையாடல் நடைபெற்றது.அதில் வர்த்தக சங்க தலைவர்சகோ.RV.ஆனந்த் அவர்களும் திராவிடர் கழக பிரமுகர் சகோ.சித்தார்த்தன் அவர்களும் வணிகர் நலச்சங்க நிர்வாகிகளில் ஒருவரான சகோ.ஜீவா அவர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் இதுபோன்ற அமர்வுகள் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்க உதவும் என தெரிவித்தனர். இறுதியாக Jih ஊழியர். சகோ.முகமது ஜபருல்லா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இந்த அமர்வில் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த 60 நபர்கள் உட்பட சுமார் 100 நபர்கள் கலந்துகொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..
*****
Jih
Mannargudi