News Channel

சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி,- மணப்பாறை JIH கிளை மணப்பாறை கிளை

krooree.com

இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாவதாக 
 வல்ல இறைவனின் கிருபையால் 09.03.2025அன்று மணப்பாறை ராஜீவ் நகர் பகுதியில் ஜமாதே இஸ்லாமிக் மணப்பாறை கிளை மற்றும் புர்கானியா மதரஸா இணைந்து நடத்தும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் மணப்பாறை ஜமாஅத்தே இஸ்லாமிக் ஹிந்த் தலைவர், உறுப்பினர்கள், ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
 நிகழ்வின் துவக்கமாக மணப்பாறை JIH உறுப்பினர் மௌலவி ஜாபர் உசேன் மன்பயீ அவர்கள் சமுதாய ஒற்றுமைக்காகவும் இஸ்லாத்தில் சமுதாய ஒற்றுமை குறித்தும் குர்ஆனில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து அழகிய உரையாற்றினார்.
 மதரஸா நிர்வாகிகள் மற்றும் மதரசாவில் பயிலும் மாணவ கண்மணிகள் பங்கு பெற்று நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு உதவி புரிந்தனர்.
 சமுதாயத்தில் இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாய மக்களுக்குமான ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்குடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 நிகழ்ச்சியின் நிறைவாக புர்கனியா மதரசாவின்  நிர்வாகி ஜனாப் ஜாகிர் உசேன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.