15 பிப்ரவரி 2025
செய்தி வெளியீடு
ஜகாத் சென்டர் இந்தியா (ZCI) மாற்றத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் வேகமாக வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளது:
அப்துல் ஜப்பார் சித்தீகி,
செயலாளர், ஜகாத் சென்டர் இந்தியா
புது தில்லி: ஜகாத் சென்டர் இந்தியா (ZCI) ஜகாத் மற்றும் நன்கொடையாக கிடைக்கும் வளங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக நலனுக்காக பாடுபடும் ஒரு தன்னார்வ அமைப்பாகும். கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய மக்களை மேம்படுத்துவதே இதன் நோக்கம். நாட்டின் மிகவும் ஏழ்மையான நிலையில் தனித்து விடப்பட்ட குடும்பங்களிடையே நீண்டகால பொருளாதார நிலைத்தன்மையையும், தன்னம்பிக்கையையும் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜகாத் சென்டர் இந்தியா தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் தாக்கத்தையும் அதன் செயலாளர் அப்துல் ஜப்பார் சித்தீகி எடுத்துரைத்தார். அதன் 2024 ஆண்டு அறிக்கையை வெளியிட்டு ஊடகங்களுக்கு அவர் அளித்த அறிக்கையில், "அல்லாஹ்வின் அருளாலும், எங்கள் நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பயனாளிகளின் உறுதியான ஆதரவாலும், ஜகாத் சென்டர் கிட்டத்தட்ட 5,000 தனிநபர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. மேலும் நிதி சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கையை அடைய அவர்களை வலுப்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் 20 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு அதன் செயல்பாடுகளை ஜகாத் சென்டர் விரிவுபடுத்தியுள்ளது. நாடு தழுவிய செயல்பாடுகளின் மூலம், மிகவும் தகுதியான சமூகங்களைச் சென்றடையவும், வறுமையின் பிடியை நீக்க தேவையான ஆதரவை அளிக்க எங்களால் முடிந்தது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 6.2 கோடி ரூபாய் ஜகாத் நிதியை நமது மையம் சேகரித்தது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இந்த நிதி கிட்டத்தட்ட 100% பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக செலவுகளுக்கு மிகவும் குறைந்த நிதியே பயன்படுத்தப்பட்டது. இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வளங்களை திறம்பட பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது."
"ஜகாத் சென்டரின் முயற்சிகள் வாழ்வாதார உதவி, கல்வி மற்றும் சமூக நலன் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் கவனம் செலுத்தியுள்ளன" என்று திரு. சித்தீகி தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில், 4,923 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சென்டரின் உதவியுடன் ஜகாத் கொடுப்பவர்கள் ஆதரவளித்துள்ளனர். இந்த பணிகளின் தாக்கம் ஆழமானதென பயனாளிகளிடமிருந்து நாங்கள் பெறும் கருத்துகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. நிதி உதவி பெற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு, பயனாளிகள் தங்கள் வாழ்க்கையில் ZCI இன் ஆதரவின் தாக்கத்தை மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்பது எங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது. பயனாளிகள் பின்வருமாறு சராசரியாக மதிப்பிட்டுள்ளனர்:
முஸ்லிம் சமூகத்துடன் நெருக்கமான உணர்வு- 94.8% (4.74/5),
நம்பிக்கை அதிகரிப்பு- 93.6% (4.68/5)
நிதி நிலைத்தன்மை மேம்பாடு: 92.6% (4.63/5)
இந்த எண்ணிக்கைகள் ஜகாத்தின் செண்டரின் மாற்றத்திற்க்கான ஆற்றலையும், சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன."
உற்பத்தித் திட்டங்களில் ZCI கவனம் செலுத்துவதைப் பற்றி விவரித்த ZCI செயலாளர், "நுகர்வுத் திட்டங்களில் அல்லாமல் உற்பத்தித் திட்டங்களில் ஜகாத் நிதியைப் பயன்படுத்துவதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த அணுகுமுறை பயனாளிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படுவது மட்டுமல்லாமல், நீண்டகால நிதி சுதந்திரத்தை அடைய அவர்களுக்குத் தேவையான உபகரணங்களையும், வளங்களையும் பெறுவதை உறுதி செய்கிறது. 2024 ஆம் ஆண்டில், ZCI ஜகாத் நிதியை பின்வருமாறு வழங்கியது:
வாழ்வாதார உதவி- 63%,
மசாவத் (ரேஷன், ஓய்வூதியம், சுகாதாரம்)- 18%
திறன் மேம்பாடு மற்றும் கல்வி -13%
நிர்வாக மற்றும் தொழில்நுட்ப செலவு- 6%
இந்த ஒதுக்கீடு ஒரு நிலையான தாக்கத்தை உருவாக்குவதிலும், தன்னம்பிக்கை அடைய தனிநபர்களை வலுப்படுத்துவதிலும் எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. ZCI இன் முயற்சிகள் இந்தியா முழுவதும் பயனாளிகளைச் சென்றடைந்துள்ளன, மகாராஷ்டிரா (1,050 பயனாளிகள்), மத்தியப் பிரதேசம் (418) மற்றும் பீகார் (258) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான தனிநபர்கள் ஆதரிக்கப்படுகிறார்கள். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் எங்கள் இருப்பு சமூகத்தின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதை உறுதி செய்கிறது."
செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ZCI இன் எதிர்கால தொலைநோக்குப் பார்வை பற்றிப் பேசிய ஜனாப். அப்துல் ஜப்பார் சித்தீகி "இந்திய முஸ்லிம்களிடமிருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜகாத் ஆக வசூலிக்கப்பட வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் தற்போது சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த இடைவெளி சமூகத்திற்குள் அதிக விழிப்புணர்வும், ஈடுபாடும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள்தொகையில் 67% பேரை உள்ளடக்கிய 240 மண்டலங்களுக்கு அதன் முயற்சிகளை விரிவுபடுத்துவதே ZCI இன் தொலைநோக்குப் பார்வை. சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவுடன், இந்த இலக்கை அடைய முடியும் மற்றும் வறுமையற்ற, தன்னம்பிக்கை கொண்ட முஸ்லிம் சமூகத்தை உருவாக்க முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அனைத்து முஸ்லிம்களும் தங்கள் ஜகாத் என்ற மார்க்கக் கடமையை நிறைவேற்றி இந்த உன்னத நோக்கத்திற்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நாம் ஒன்றாக இணைந்து பலருடைய வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு, ஆர்வமுள்ள நபர்கள் எங்கள் வலைத்தளத்திற்கு zakatcenterindia.org வருகை தரலாம் அல்லது +91-8920221894 எண்ணில் அல்லது contact@zakatcenterindia.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வெளியீடு:
சல்மான் அகமத்
தேசிய உதவிச் செயலாளர், ஊடகத் துறை,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
புது தில்லி