அசாதாரண தைரியமும், பொறுமையும் கொண்ட ஜாகியா ஜாஃப்ரி மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க விடாமுயற்சியுடன் நடத்தப்பட்ட போராட்டத்தின் வரலாற்று அடையாளமாக அவர் உருவாகியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு குல்பெர்க் சொசைட்டி படுகொலையில் கொடூரமாக கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அஹ்சன் ஜாஃப்ரியின் மனைவிதான் ஜாகியா ஜாஃப்ரி.
கணவரை இழந்த ஒரு ஆதரவற்ற பெண்மணியாக தனது பெரும் துக்கத்தையும்
இழப்பையும் தாங்கிக் கொண்டு, தனது வலியை பொறுப்புணர்வின் அசைக்க முடியாத போராட்டமாக மாற்றினார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, பல சட்ட ரீதியான பின்னடைவுகளுக்கு மத்தியிலும், குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டுமல்ல,
ஜனநாயகத்தின் ஆன்மாவை பாதுகாக்க வேண்டி நீதியை பெறுவதில் உறுதியாக இருந்தார்.
அவரது வலிமையும்,
உறுதியும் தலைமுறை தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
அவரது பிள்ளைகளுக்கும், நேசத்திற்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வல்ல இறைவன் அவருக்கு மன்னிப்பையும், சுவனத்தில் உயர்ந்த இடத்தையும் வழங்குமாறு பிரார்த்திக்கிறோம்.
தனது கடைசி மூச்சு வரை நீதிக்காக அயராது போராடிய ஜாகியா ஜாஃப்ரி பொறுமை மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாக என்றென்றும் நினைவு கூரப்படுவார்.
சகோதரி ரஹ்மத்துன்னிஸா
அப்துல்ரசாக்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தேசிய செயலாளர்,