News Channel

பத்திரிக்கை அறிக்கை

பத்திரிக்கை செய்தி

18 ஜனவரி 2025 

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வரவேற்றுள்ளது

புதுடெல்லி:
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தலைவர் சையத் சதாதுல்லாஹ் ஹுசைனி அவர்கள் வரவேற்றுள்ளார். 

அவர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில்,  
இந்த போர்நிறுத்தம் காசாவில் இரத்தக்களரியை நிறுத்துவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பாகும்

மேலும் 
மிகவும் அழிவுகரமான இனப்படுகொலைகளில் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு, அடிப்படை தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. 

காசாவின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புக்கான முயற்சிகளை சர்வதேச சமூகம் அவசரமாக தொடங்க வேண்டும். 

அரபு நாடுகளில் இருந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாக வெளியேற்றுவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள், சுதந்திர பாலஸ்தீனிய அரசை நிறுவுவதன் மூலம் 
பாலஸ்தீன மக்களுக்கு சுதந்திரத்தை உறுதி செய்வது என்பதாகும்
என JIH தலைவர் குறிப்பிட்டார்.

பாலஸ்தீன மக்களின் துணிச்சலான மற்றும் வீரமிக்க எதிர்ப்பு,
அவர்களின் பொறுமை,
வரலாற்று நிகழ்வுகள்,
அவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து மதிப்பளித்தார்.

இப்போது, 
இந்த போர்நிறுத்தம் 15 மாதங்களுக்குப் பிறகு 48,000 க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைக் கொன்ற கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு வருகிறது, அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள், பெண்கள், 
மருத்துவர்கள், 
ஆசிரியர்கள், 
நிவாரணப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் போருக்கு சம்பந்தமில்லாத  குடிமக்கள் ஆகியோர் அடங்குவர்.
நாகரீக உலகம் என்பதின் 
மீது "படிந்த கறையாக" 
காசா தாக்குதல் இருக்கும், 
மேலும் 
வரலாறு மற்றும் மனிதநேயத்தின் மனசாட்சியை முள்ளாக குத்தும்," என அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை போர்நிறுத்தம் அமலுக்கு வரவுள்ள நிலையில், 
இந்த இடைகாலத்திலும் 21 குழந்தைகள்,
25 பெண்கள் உட்பட 
87க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்து இஸ்ரேல் தனது வன்முறையை தொடர்ந்ததை 
சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

இஸ்ரேலின் விரிவாக்க முயற்சி,
சர்வதேச விதிமுறைகளை மீறுவது,
மனிதாபிமான கொள்கைகளை அப்பட்டமாக புறக்கணிப்பது, 
பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாகவும் இஸ்ரேல் இருக்கிறது என்பதை உலகம் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

சர்வதேச சட்டம்&
மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் இஸ்ரேலை, 
சர்வதேச சமூகம் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் 
என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோருகிறது.

இந்த அழிவுக்குப் பொறுப்பான உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகள், தண்டனையின்றி மற்றும் வருத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்ட அவர்களின் நடவடிக்கைகளுக்கு நீதிவிசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று 
சஆதத்துல்லாஹ் ஹுசைனி மேலும் கூறினார்.  

போர் நிறுத்த உடன்படிக்கையை 
இறுதிப் புள்ளியாக பார்க்கக் கூடாது 
என அவர் வலியுறுத்தியுள்ளார். 
ஆக்கிரமிப்பு மற்றும் அநீதியின் மூல காரணங்கள் நிரந்தர சமாதான தீர்வுக்கான காரணமாக இருக்க வேண்டும். 

சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான கோரிக்கையை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்  மீண்டும் வலியுறுத்துகிறது. 

மத்திய கிழக்கில் நீடித்த அமைதி என்பது 
பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தோர் திரும்புவதற்கான உரிமை, 
அல்-அக்ஸா மஸ்ஜித்,
அல்-குத்ஸ் இவைகளில் இருந்து முழுமையான இஸ்ரேலிய வெளியேற்றம் 
மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கும் நீதியின் மூலம் மட்டுமே அடைய முடியும்.  

மேற்கண்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், வருங்காலத்தில் ஒன்றாக வாழ்வதற்கும்,
பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுக்கும் நிரந்தர நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சமூகத்தை வலியுறுத்துகிறோம் 
என கூறினார். 

வெளியீடு:
சல்மான் அஹ்மத்    
தேசிய உதவிச் செயலாளர், ஊடகத் துறை, 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமையகம்.  
புது தில்லி.