News Channel

பத்திரிக்கை அறிக்கை

"பத்திரிக்கை செய்தி"

14-01-2025

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் 
மத்திய ஆலோசனை குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

புதுடெல்லி : 
தமிழ்நாடு, ஏலகிரியில் 
ஜனவரி 7-9, 2025 அன்று நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனை குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

"உள்நாட்டுப் பிரச்சினைகள்"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனை குழு கூட்டம் 
நாட்டின் தற்போதைய வகுப்புவாத மற்றும் பொருளாதார நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. 
நாட்டின் தற்போதைய அரசாங்கம் மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக,  முக்கியமற்ற பிரச்சினைகளுக்கு வகுப்புவாதம் போன்ற வண்ணம் பூசி
முக்கிய தேசியப்  பிரச்சினைகளாக்கி தனது அரசியல் அஜண்டாவாக மாற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதை இந்தக் கூட்டம் சுட்டிக்காட்டுகிறது. 

ஒரே நாடு ஒரே தேர்தல், 
வக்ஃப் திருத்த மசோதா, 
பொது சிவில் சட்டம் போன்ற திட்டங்கள் இந்த உத்தியின் ஒரு பகுதியாகும். 

இந்த நடவடிக்கைகளின் மூலம், நாட்டின் ஆளும் கட்சி அதிகரித்து வரும் விலைவாசி ஏற்றம், அதிகரித்து வரும் பணவீக்கம், தொடர்ந்து அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை, மோசமாகி வரும் சட்டம்  ஒழுங்கு பிரச்சினை, சுமார் 20 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் மணிப்பூர் வன்முறைகள் போன்ற தீவிரமான பிரச்சினைகளில் இருந்து  பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிகளில் தற்போதுள்ள அரசு ஈடுபட்டுள்ளது. 
இதனால் இளைஞர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

மத்திய ஆலோசனை குழு கூட்டம் 
வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது தொடர்பான சட்டங்கள் இருந்தும், 
நாட்டின் பல்வேறு பகுதிகளில்  வெறுப்பை பரப்பும் சில விஷமிகள் மசூதிகளின் அடித்தளத்திலோ அல்லது வளாகத்திலோ கோவில்கள் இருப்பதற்கான ஆதாரங்களை தேடுவதாக சதி செய்வதை கண்டிக்கிறது. 
இதனால், புதுப்புது பிரச்சனைகள் உருவாக்கப்படுகின்றன. 

ஊடுருவல்காரர்கள் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்கள் காவல்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினரால் துன்புறுத்தப்படுகின்றனர்.
மேலும் இந்த அனுமானங்கள் அரசியலாக்கப் படுவதுடன் நாட்டில் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. 

மத்திய ஆலோசனை குழு, இந்தப் பிரச்சனைகளை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டு, அவற்றைத் தீர்க்க நீதி அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று  வலியுருத்துகிறது. 

நாட்டின் சிறுபான்மையினர் தங்கள் தாய்நாட்டின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சியில் பங்கு பெறுவதற்கு நியாயமான வாய்ப்புகளை வழங்குவதுடன், நாட்டுக்கும் மக்களுக்கும் பயனளிக்காத மற்றும் குழப்பங்களை  ஏற்படுத்தி அதிகமான இழப்புகளை ஏற்படுத்தும் தேவையற்ற பிரச்சினைகளில் மக்களை சிக்க வைக்கப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.

மத்திய ஆலோசனை குழு 
இந்த கூட்டம் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது உலகம் முழுவதும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்துகிறது.

பங்களாதேஷில் இருக்கும் ஹிந்து சிறுபான்மையினர் நிலையும் கவலைக்குரியதாக இருக்கிறது. 
மதத்தின் அடிப்படையில் தங்கள் குடிமக்களிடையே பாகுபாடு காட்டாமல், 
தங்கள் நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்யவும், 
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் நாடாளும் அரசாங்கங்களுக்கு மத்திய பிரதிநிதிகள் சபையின்
இந்த கூட்டம், கேட்டுக்கொள்கிறது.

"உலகளாவிய பிரச்சினைகள்"

சிரியாவில் அடக்குமுறை அரசாங்கம் மற்றும் சர்வாதிகார ஆட்சியிலிருந்தும் அங்குள்ள மக்கள் விடுப்பபட்டதற்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனை குழுவின் 
இந்தக் கூட்டம்  மகிழ்ச்சியையும் திருப்தியையும் தெரியபடுத்துகிறது. 

விரைவில்  மக்களின் அபிலாஷைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப ஒரு நல்ல அரசு அமைக்க வேண்டுமென்று அங்கு அமைந்துள்ள இடைக்கால அரசை இந்த மத்திய பிரதிநிதிகள் சபை கேட்டுக் கொள்கிறது. 

மேலும் நாட்டின் அனைத்து குழுக்களும் சிரியாவின் மறுசீரமைப்பில் பங்கேற்க சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இப்போது உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சிரியா அகதிகள் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப முடியும் என்றும் அவர்களின் சிரமங்கள் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கிறது. இதன் பின்னர் சிரியா மக்கள் பெற்ற சுதந்திரத்தை சர்வதேச சக்திகள் தங்கள் சொந்த  நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும், 
நீண்ட காலத்திற்கு பிறகு சிரியா மக்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. 
அவர்களின் உள்நாட்டு விஷயத்தில் யாரும் மூக்கை நுழைக்க வேண்டாமென மத்திய ஆலோசனை குழு கேட்டுக் கொள்வதுடன் உலகநாடுகள் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் சிரியாவின் புனரமைப்பில்தாராளமாக உதவிட கேட்டுக்கொள்கிறது.

சிரியா மீது இஸ்ரேல் சமீபத்திய நாட்களில் நடத்திய  வான்வழி ஆக்கிரமிப்பு தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறது. மேலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கொள்கைகளை நிறுத்தவும், பாலஸ்தீனிய மக்களின் நியாயமான உரிமைகளை மீட்டெடுக்கவும் அமெரிக்கா மற்றும் பிற உலக சக்திகளுக்கு அழைப்பு விடுக்கிறது. 

பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகள் சீரமைக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கக் கோருகிறது.  
அப்பாவி குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்தவும், 
இந்த கவுன்சில் உலகில் உள்ள நாகரீக நாடுகளை கேட்டுக்கொள்கிறது. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

வெளியீடு :
முஹம்மது சல்மான் 
தேசிய துணைச் செயலாளர், ஊடகத் துறை, 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
புது தில்லி.