News Channel

நிவாரண நிதி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர்கள் வயநாடு இயற்கைப் பேரிடர் நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட்டு, தமிழகத்தில் நல்லுள்ளங்கள் வழங்கிய நிவாரண நிதியை பீப்பள்ஸ் ஃபவுண்டேஷன் பொறுப்பாளர்களிடம் வழங்கினர்.

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரின் போது மறுவாழ்வு நிவாரணத் திட்டங்களுக்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. அதனடிப்படையில் பல நல்லுள்ளங்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு & புதுச்சேரி தலைவர் _மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ_ அவர்கள், துணைத் தலைவர் _ஜனாப். ஐ. ஜலாலுதீன்_ அவர்கள், ஜமாஅத் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், கோவை ஜமாஅத் பொறுப்பாளர்கள் மற்றும் ஸாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு பொறுப்பாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு நேரில் சென்று கேரள ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தொண்டு நிறுவனமான பீப்பள்ஸ் ஃபவுண்டேஷன் பொறுப்பாளர்களிடம் நிவாரண நிதியினை வழங்கினர்.

தொடர்ந்து மறுவாழ்வு நிவாரணப் பணிகளுக்கான ஜமாஅத்தின் திட்டங்களைக் கேட்டறிந்தனர். 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரளா, வயநாடு மறுவாழ்வுப் பணிகளுக்காக ரூபாய் 20 கோடி  மதிப்பீட்டில் திட்டங்களைத் தீட்டியுள்ளது.

இத்திட்டங்களில் கல்வி மற்றும் தொழில் சார்ந்த மறுவாழ்வுத் திட்டங்களுக்காக தமிழக நிதி வழங்கப்பட்டது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

எல்லாம் வல்ல அல்லாஹ் வயநாடு பகுதி மக்களுக்கு இயல்பு வாழ்க்கைக்கு மிக விரைவில் திரும்பிட அருள்புரிவானாக! 

இப்பணிகளுக்காக நிதி வழங்கியவர்கள், பணி செய்பவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நிறைவானக் கூலியை இரு உலகிலும் நல்கிடுவானாக!ஆமீன்.