News Channel

ஒழுக்கமே சுதந்திரம் தெருமுனை பிரச்சாரம்

ஒழுங்கமே சுதந்திரம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளை பெண்கள் வட்டம் சார்பாக 03.09.2024 செவ்வாய்க்கிழமை மாலை பழைய பேட்டை மில்லத் நகர் மற்றும் மக்கான் தெரு ஆகிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.

 நகர தலைவர் சகோதரர் சிபகத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.

 முதலில் இறைவசனம் சகோதரி சல்மா ஓதினார் .

 முன்னிலை பூரா மஸ்ஜித் துணைச்செயலாளர் சகோதரர் முனீர் முன்னிலை வகித்தார்.

பெண்கள் கண்ணியம் ஒழுக்கம் பற்றி சகோதரி தஹ்சீன் சாஹெபா மற்றும் நாட்டில் நிலவும் ஒழுக்க சீர்கேடுகள் அதன் தாக்கம் நம் வரை எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை மண்டல அமைப்பாளர் சகோதரர் அப்துல் ஹமீத் சிறாப்பான முறையில் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியை சகோதரர் பையாஸ் அஹ்மத் வழிநடத்தினார்.

எல்லா புகழும் இறைவனுக்கே