News Channel

மீலாதுன் நபி சிறப்பு நிகழ்ச்சி

"மீலாது நபி சிறப்பு நிகழ்ச்சி" 

JIH - இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் (ICC ) சார்பாக 
இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் உள்ள 
ஓடைக்குளம் பகுதியில்  28/9/2023 வியாழக்கிழமை அன்று 
மாலை  6:30 முதல் இரவு 8:00 வரை
"நற்குணத்தின் நாயகர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள்"   

என்கின்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு  
இந்த  நிகழ்ச்சிக்கு சகோதர சமுதாயம் மற்றும் உள்ளூர் ஜமாத்தினர் 
அழைக்கப்பட்டிருந்தது. 

சமீப காலமாக இந்தியாவில் முஸ்லிம்கள் மீது இழைக்கக்கூடிய அநீதிகள், 
வெறுப்பு பிரச்சாரம், அவதூறுகள் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய 
இந்த நேரத்திலே இந்த நிகழ்ச்சி மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. 

ஒரு சமூகத்தின் மீது இன்னொரு சமூகம் ஆதிக்கம் செலுத்துவது 
ஒருவகையான நிலை என்றால். அதைவிட பெரிய ஆபத்து ஒரு சமூகத்தை 
குறித்து அவதூறு பரப்பப்படக்கூடிய செயல். 

இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம்களைக் 
குறித்து பொதுவான மக்களின் பார்வையில் தவறாக பரப்பப்படுகிறது. 
இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக சகோதர சமுதாயத்திற்கு 
முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் 
இறைத்தூதரை பற்றியும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது காலத்தின் 
கட்டாயமாக இருந்து கொண்டிருக்கிறது. 

காரணம்  இஸ்லாத்தினுடைய உண்மையான செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லையென்றால். தவறான செய்திகளை சொல்பவர்களும் , 
சொல்லப்படும்  செய்தியும் அதுதான் உண்மை என்று நம்பக்கூடிய நிலை பெருகிவிடும். 
இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

மிகச் சிறப்பான முறையில், ' மதுரை இஸ்லாமிக் சென்டர் துணை செயலாளரும் , 
இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டப் பொறுப்பாளருமான '

ஜனாப் : தாயீ - K. நஜீர் ஹுசைன் அவர்கள்.  

"நற்குணத்தின் நாயகர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள்"
என்கின்ற கருத்தில் 
மிக அழகிய முறையில் உரை நிகழ்த்தினார்கள். 

அண்ணலார் உடைய நற்குணத்தை நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்த சகோதர 
சமுதாயத்தினருக்கு தெளிவாக விளக்கி கூறினார்கள். மட்டுமல்லாமல் 
முஸ்லிம்களுக்கும் அது மிகப்பெரிய படிப்பினை மிக்க உரையாக அமைந்தது. 

நிகழ்ச்சியின் தாக்கமாக : 

" மீலாது நபி சிறப்பு பயானில் " பேசப்பட்ட செய்தியை கேட்டு 

மாற்று மத சகோதரர் கூறினார் : பள்ளிவாசலில் பேசப்பட்ட பயான்களை கேட்கும் பொழுது அதில் சொல்லப்படக்கூடிய கருத்துக்களில் ஒரு பத்து கருத்தையாவது நான் நடைமுறைப்படுத்த மிகவும் விரும்புகின்றேன் ஆனாலும் என்னுடைய இயலாமையின் காரணமாக அதை என்னால் செய்ய முடியவில்லை என்கின்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்கின்ற வழிமுறையை இஸ்லாம் மிக அழகிய முறையில் கூறியிருப்பது எனக்கு ஆச்சரியத்தையும் பெரும் மகிழ்ச்சியும் அளிக்கிறது என்று கூறினார்.

மற்றொரு சகோதரர் கூறுகின்ற பொழுது இஸ்லாத்தினுடைய கருத்துக்கள் எல்லாம் மிக உயர்வானதாக அழகானதாக இருக்கிறது ஆனால் முஸ்லிம்களை பார்க்கும் பொழுது இஸ்லாத்தில் சொல்லப்பட்ட காரியங்களை நடைமுறைப்படுத்துவதில்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது. முஸ்லிம்கள் அதை முழுமையாக பின்பற்றினால் என்னைப் போன்ற மக்கள் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் என்று கூறினார்.

மேலும் சகோதரர் கூறுகின்ற பொழுது இஸ்லாத்தினுடைய கண்ணியத்தை குறைக்கக்கூடிய முஸ்லிம்களை நான் வெகுவாக பார்க்கிறேன் இஸ்லாத்தில் எதையெல்லாம் கூடாது என்று சொல்லி இருக்கிறதோ மது குடிக்க கூடிய முஸ்லிம்கள், வட்டிக்கு விடக்கூடிய முஸ்லிம்கள், ஒழுங்கீனமாக இருக்கக்கூடிய முஸ்லிம்களை நான் பார்க்கிறேன் இப்பொழுது இந்த செய்தி எல்லாம் கேட்ட பொழுது அவர்கள் இந்த மார்க்கத்திற்கு செய்கின்ற துரோகமாக நான் விளங்குகின்றேன். இஸ்லாத்தில் சொல்லப்பட்ட அந்த வழிமுறைகளை அனைவரும் பின்பற்றினால் இந்த உலகம் மகிழ்ச்சியாக சுபிட்சமாக இருக்கும் என்கின்ற தோரணையில் அவருடைய கருத்தையும் பதிவு செய்தார்.

இன்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் சொல்லப்பட்ட கருத்து இதுபோன்ற சகோதர சமுதாயத்தை சார்ந்த எங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அது மட்டுமல்ல இது போன்று இன்னும் அதிகம் அதிகமான நிகழ்ச்சிகளை நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள் நாங்களும் கலந்து கொள்கின்றோம் நாங்களும் தெரிந்து கொள்கின்றோம் இது அவசியமாகவும் இருக்கிறது என்கின்ற செய்திகளையும் சொன்னார்கள்.

இந்த நிகழ்ச்சியை ஓடைக்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஜனாப் : அக்பர் அலி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். 

நிகழ்ச்சியின் துவக்கமாக ஓடைக்குளம் ஜும்ஆ பள்ளியின் இமாம் மற்றும் இஸ்லாமிக் சென்டர் ஊழியருமான மௌலவி ஆதம் அலி ஃபைஜி அவர்கள் கிராத் ஓதி நிகழ்ச்சியை அழகுற வழிநடத்தினார் .

ஓடைக்குளம் முஸ்லிம் ஜமாத்தின் பொருளாளர் ஜனாப் ரஷீத் கான் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றினார்.

இறுதியாக ஓடைக்குளம் ஜமாத்தை சார்ந்த ரஹ்மான்கான் நன்றியுரை நிகழ்த்தினார் .

நிகழ்ச்சி வருகை தந்த அனைவருக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டையும். நிகழ்ச்சியின் முடிவில் இரவு உணவும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் சுமார் 140க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். இதில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 40 நபர்களும். முஸ்லிம்கள் ஆண்கள் பெண்கள் என 100 நபர்களுக்கும் கலந்து கொண்டனர். 

இறைவன் அருளால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்.

-JIH - இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் ( ICC )