அன்பார்ந்த சகோதரர்களே
மது தீமையின் தாயாக இருக்கிறது என்று முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அதன் அடிப்படையில் மதுவை ஒழிப்பது நம்முடைய ஒவ்வொருவரின் முக்கியமான கடமை ஆகும்.
என்ற அடிப்படையில் ,
இன்று மன்னார்குடி மது ஒழிப்பிற்கான முதல் நிகழ்ச்சியாக மன்னார்குடி பெரிய பள்ளி வாசல் மஹல்லாவை சேர்ந்த நிர்வாகிகள் அவர்களிடம் நம்மளுடைய பிரச்சாரத்தை பற்றி எடுத்துக் கூறி அவர்களிடம் அனுமதி கடிதம் வழங்கினோம்.
அவர்கள் நமக்கு உடனே அனுமதி அளித்தார்கள் .
அவர்களுக்கு நம்முடைய சாலிடாரிட்டி அமைப்பின் சார்பில் நன்றியையும் அவர்களுக்காக நாம் இறைவனிடம் துவா செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.
அடுத்தபடியாக இன்றைய ஜும்மாவில் நம்முடைய பள்ளியின் இமாம் அவர்கள் மதுவின் தீமையை பற்றியும்
அதனால் ஏற்படும் இழப்புகளை பற்றியும் மது எந்த அளவிற்கு நமக்கு கேடுகளை விளைவிக்கிறது என்பதை குறித்தும் மிக அழகான ஒரு உரையை நிகழ்த்தினார்கள்.
இமாம் அவர்களுக்கு நம்முடைய சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதன் பிறகு பள்ளியின் வெளிப்புறத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பெரிய பள்ளி மஹல்லாவை சேர்ந்த மஹல்லாவாசிகள் அனைவரும் ஆர்வத்தோடு இந்த மதுவுக்கு எதிரான கையெழுத்து
இயக்கத்தில் முனைப்போடு அனைவரும் கையெழுத்து விட்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர் .இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடைபெறுவதற்கு நமக்கு உறுதுணையாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்த நமது பெரிய பள்ளி வாசல் இளைஞர்களுக்கு சாலிடாரிட்டி அமைப்பு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பை சேர்ந்த சகோதரர்கள் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே
நீங்கள் அல்லாஹ்வின பாதையை நோக்கி ஒரு அடி அடித்து வைத்தால் அவன் நம்மை நோக்கி ஓடி வருவதாக
முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.