அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
மன்னார்குடி Jih மகளிரணி சார்பாக நடத்தப்பட்டு வரும் பெண்கள் மேம்பாட்டு மையத்தின் தையல் பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவிகள் 49 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்த நிழ்வில் சுமார் 70 நபர்கள் கலந்து கொண்டனர் . தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை *அருட்செல்வி.ஆரோக்யசெல்வி* அவர்களும் பெரியபள்ளிவாசல் தலைவர் *சகோ.M.அப்துல் ரஹிம்* அவர்களும் பிரபல தன்னார்வ நிறுவனமான *நேசக்கரம்* , ஒருங்கிணைப்பாளர் *சகோ.S.கோபாலகிருஷ்ணன்* அவர்களும் தஞ்சை Jih மகளிரணி பொறுப்பாளர் *சகோ.சலிமாபேகம் BA* அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கு சான்றிதழும் விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வினை முழுமையாக மன்னார்குடி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணியினர் வடிவமைத்து மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
########
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
மன்னார்குடி