News Channel

S.M பாக்கர் மரண நிகழ்வு

எஸ்.எம்.பாக்கர் இறுதி நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர்கள்
----------------------------------------

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களின் ஜனாஸா மன்னடியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு அரசியல், சமுதாயத் தலைவர்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மெளலவி ஹனீஃபா மன்பயீ, மாநிலச் செயலாளர்கள் கே.ஜலாலுதீன், எஸ்.என். சிக்கந்தர், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் வி.எஸ்.முஹம்மத் அமீன் ஆகியோர் சகோதரர் பாக்கரின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தோழர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

மாலை புதுக்கல்லூரியில் நடைபெற்ற ஜனாஸா தொழுகையிலும், ராயப்பேட்டையில் நடைபெற்ற நல்லடக்கத்திலும், பின்னர் நடைபெற்ற இரங்கல் நிகழ்விலும் ஜமாஅத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமிய அமைப்புத் தலைவர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பல ஊர்களிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இறுதி நிகழ்வில் பாக்கர் அவர்களின் நல்லறங்கள் நினைவு கூறப்பட்டு அவருக்காக மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்புச் சகோதரர் பாக்கரின் மறுமை வாழ்வை வெற்றியாக்கித் தருவானாக!

ஊடகத்துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு& புதுச்சேரி

https://www.facebook.com/share/p/2EKQqsEyq4yJUd3a/?mibextid=oFDknk