பரிசளிப்பு விழா
கடந்த 2024 மே மாதம் இராமநாதபுரம் மாவட்டம் ரமலான் நகரில் 1ம் வகுப்பு முதல் 6 ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து கோடைகால இஸ்லாமிய வகுப்பு நடைபெற்றது.
ஆண்டுதோறும் பள்ளிக்கூடம் விடுமுறை நாட்களில் கோடைகால இஸ்லாமிய வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றன அவ்வகையில் இந்த ஆண்டும் நடத்தப்பட்டு வந்தது. அதில் மாணவ மாணவிகளை மூன்று வகுப்புகளாக பிரித்து காலை 9:00 முதல் லுஹர் தொழுகை வரை மே மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோடைகால இஸ்லாமிய வகுப்பு நடைபெற்றது. இதில்
👉துஆ
👉சூரா
👉பயான்
👉வரலாறு
👉பண்பியல் பயிற்சி
என மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
Jih-ஊழியர் வட்டம் வழிகாட்டுதலின்
ரமலான் நகர் ஜமாத் தலைமையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்ற முடிந்தது. அதில் பங்கு எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா கடந்த 1/6/2024 தேதியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் JIH - ஊழியர் வட்ட பொறுப்பாளரும், இஸ்லாமிக் சென்டர் மதுரை துணைச் செயலாளர் ஜனாப், நஜீர் ஹுசைன் அவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்... இந்த உலகத்தில் மனிதர்கள் பொருளாதாரத்தை அடைவதிலும் அதைத் தேடுவதிலும் முழு ஆற்றலையும் நேரத்தையும் செலவழிக்கின்றார்கள்.
இந்த உலகத்தில் நமக்குத் தேவையானதுமான பொருளாக பொருளாதாரம் இருந்தாலும் அவைகள் எல்லாம் இந்த உலகத்தோடு அழிந்து விடக் கூடியது என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். நாளை மறுமையில் ஒவ்வொரு மனிதனுடைய ஈடேற்றத்தை உறுதி செய்யக் கூடியது குர்ஆனும் அதில் கூறப்பட்ட வழிமுறைகள் தான்! எந்த ஒரு மனிதன் குர்ஆனிய வழிமுறையோடு இந்த உலகத்தை அணுகுகின்றானோ, அடைந்து கொள்கின்றானோ, அனுபவிக்கின்றானோ அவன் இவ்வுலகிலும் வெற்றி அடைகின்றான் மறு உலகிலும் வெற்றி அடைகின்றான் உலக விவகாரங்களில் கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை விட ஒரு மடங்கு கூடுதலாக குர்ஆனுக்கும் குர்ஆனிய வாழ்வுக்கு கொடுக்கின்ற பொழுது அவனுடைய மறுமையின் வாழ்வு என்பது பிரகாசமாக மாறிவிடும் என்று சில உதாரணங்களையும், சம்பவங்களையும் வருகை புரிந்துள்ள மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஜமாத்தார்கள் முன்னிலையில் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியை ரமலான் நகர் ஜமாத் தலைவர் தலைமை ஏற்றார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் . இந்த 30 நாள் கோடைகால் இஸ்லாமிய வகுப்பை நடத்திய ரமலான் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி , சம்சுதீன் ஃபைஜி அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தி கொடுத்தார். இறுதியாக மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.