பெருநாள் முப்பெரும் விழா நிகழ்ச்சி -
பெருநாள் தொழுகை , விளையாட்டு விழா , கேள்வி - பதில் பரிசளிப்பு விழா என நடைபெற்றது.
பெருநாள் தொழுகையும் -இனிப்பும் :
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் இறுதியில் பெருநாள் தொழுகையின் போது அனைத்து கிராமங்களிலும் பெருநாள் தொழுகை நிறைவு செய்தவுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இனிப்புகள் சமைத்து உள்ளூர் ஜமாத் மக்களுக்கும் உள்ளூர் சகோதர சமுதாய மக்களுக்கும் வழங்குவது வளமையாக இருந்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் அனைத்து கிராமங்களிலும் பெருநாளன்று இனிப்புகள் சமைத்து மக்களுக்கு வழங்கி பெருநாள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் இன்னும் சில ஊர்களில் இனிப்பு பதார்த்தங்கள் வாங்கி அதை மக்களுக்கு வழங்கி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் இப்படியாக பெருநாள் அன்று பெருநாள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலே இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விளையாட்டு நிகழ்ச்சி:
மேலும் வாய்ப்புள்ள பகுதிகளில் பெருநாள் தொழுகை முடிந்தவுடன் அன்று மாலை விளையாட்டு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டும் மறவாக்குடி, மதினா நகர், இன்னும் சில இடங்களில் பெருநாளன்று மாலை விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் பங்கெடுத்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
கேள்வி-பதில்:
இன்னும் பல ஊர்களில் ரமலான் மாதத்தில் தராவிஹ் தொழுகை நிறைவு செய்தவுடன் இஸ்லாமிய மக்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் தராவிஹ் தொழுகை நிறைவு செய்தவுடன் தொழுகையில் கலந்து கொண்டவர்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன. சில பகுதிகளில் அன்று இரவு உரை நிகழ்த்தியதில் இருந்து கேள்வி கேட்கப்பட்டது, இன்னும் சில ஊர்களில் இஸ்லாமிய கேள்விகளை தொகுத்து முன்னதாக வைத்துக்கொண்டு பயான் முடிந்தவுடன் அந்த மக்களிடத்திலே அன்றைக்கான கேள்விகளை கேட்கப்பட்டன.
இப்படியாக மாதம் முழுவதும் பல பகுதிகளில் தீன் நகர், ரமலான் நகர், மதினா நகர், மறவாய்குடி, ஓடைக்குளம் இப்படி பல பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தொழுகைக்குப் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக பெருநாள் அன்று சரியாக பதில் எழுதியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மிகச் சிறப்பான முறையில் இந்த நிகழ்வும் நடைபெற்று முடிந்தன.
ஆக இந்த ஆண்டில் பல பகுதிகளில் முப்பெரும் நிகழ்வாக
📌பெருநாள் தொழுகை
📌பெருநாளன்று விளையாட்டு நிகழ்ச்சி
📌பெருநாளன்று ரமலானில் கேட்கப்பட்ட அந்த கேள்வி பதில் நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழா
என்று முப்பெரும் விழாவாக இந்த ஆண்டும் ரமலானில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.