News Channel

பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி (ஈத் மிலன்) கும்பகோணம்

கும்பகோணம் இஸ்லாமிக் வெல்ஃபேர் அசோசியேஷன் (கிஸ்வா) மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை இணைந்து நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி (ஈத் மிலன்) 21.4.2024 அன்று மாலை 7 மணிக்கு கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேரவை வளாகத்தில் நடைபெற்றது. 

ஜமாத்ஆதே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கிஸ்வா தலைவர் P.S. யூசுப் வரவேற்புரை ஆற்றினார்


துவக்க உரையாக ஜமாஆத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட அமைப்பாளர் சகோதரர் முஹம்மது யூனுஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.

வாழ்த்துரை வழங்குவதற்காக வருகை தந்த சிறப்பு விருந்தினர்களான கும்பகோணம் பேரவை பங்குத்தந்தை மற்றும் மறை மாவட்ட முதன்மை தந்தை Dr. ஃபிலோமின்தாஸ் மற்றும் சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் ஆகியோர் சமய நல்லிணக்கத்தை பற்றி சிறிய உரை நிகழ்த்தினார்கள்.

சிறப்புரை வழங்குவதற்காக மயிலாடுதுறையிலிருந்து வருகை புரிந்த பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் நா. ஞானசேகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். 

பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ஏன்? எதற்கு? மற்றும் நோன்பை பற்றிய தெளிவான விளக்கத்தை சென்னையில் இருந்து வருகை புரிந்த சமரச நாளிதழ் பொறுப்பா ஆசிரியர் மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் சகோதரர் V.S.முகமது அமீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் 

இறுதியாக நன்றியுரை கிஸ்வா திட்டச் சேர்மன் ஜனாப் எம் அக்பர் அலி அவர்கள் நன்றியுரை ஆற்றி நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. 

இந்த நிகழ்ச்சியில் 300க்கு மேலான சகோதர சமுதாய மக்கள் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் உள்ள வணிகர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் . அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.