News Channel

Teachers Day program

#ஆசிரியர் தினம்

கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று "ஆசிரியர் தினம்" சிறப்பு நிகழ்வாக இராமநாதபுர கிராமப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் உள்ள ஆசிரியர்கள் சந்திப்ப்பு நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வின் தாக்கமாக ; 

காண்டை பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கின்ற பொழுது அங்கு பணி செய்யக்கூடிய ஆசிரியர்... நான் கடந்த 13 ஆண்டு காலமாக ஆசிரியர் பணியில் இருக்கின்றேன் இதுவரைக்கும் எனக்கு யாரும் வாழ்த்து தெரிவித்ததே கிடையாது முதல் முறையாக நீங்கள் வந்து வாழ்த்து தெரிவிக்கிறீர்கள் என்று நெகிழ்ச்சியில் கண்கலங்கி விட்டனர். 

மற்றொரு ' ஆசிரியர்கள்.... ஆசிரியர் தினத்தன்று எங்களுக்குள்ளே நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு தான் இத்தனை வருடங்களாக இருந்தோம். 
ஆனால் நீங்கள் எங்களுக்காக வாழ்த்து தெரிவிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எங்களைக் குறித்த உங்களுடைய உயர்வான பார்வை எங்களை இன்னும் பணிகளை சிறப்பாக செய்வதற்கு தூண்டுகோலாக அமைகிறது என்றும் கூறினார்கள்.

அதே போல ஒவ்வொரு பகுதியில் இருக்கக்கூடிய ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கி சால்வை போர்த்தி கண்ணியப்படுத்தக்கூடிய சூழலில் வாழ்த்து தெரிவிக்க சென்ற இமாம்களை பள்ளிக்கூடத்தில் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் சக ஆசிரியர்கள் இடத்தில் தலைமை ஆசிரியர்கள் இமாம்களை குறிப்பிட்டு இவர்களும் ஆசிரியர்கள்தான் நாம் மாணவர்களுக்கு நல்வழி புகட்டுகிறோம். இவர்கள் மொத்த சமூகத்திற்குமே நல்வழி புகட்டுகிறார்கள் என்று இமாம்களை பாராட்டினார்கள். 

இப்படியான நிகழ்வு இந்த ஆசிரியர் தினத்தில் நடைபெற்றது.

 அல்ஹம்துலில்லாஹ்....