கோவையில் மக்களின் தேர்தல் அறிக்கை - 2024 ஐ வெளியிட்டு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தலைவர் மௌலவி முஹம்மது ஹனீபா மன்பஈ அவர்கள்.
______________________________
இன்று (மார்ச் 1 2024) காலை 11.30 மணி அளவில் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து "மக்களின் தேர்தல் அறிக்கை - 2024" ஐ வெளியிட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு தலைவர் மௌலவி முஹம்மது ஹனீபா மன்பஈ அவர்கள் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வையும் நடத்தினார்.
இந்திய திருநாட்டில் அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வலியுறுத்தி பணி செய்து வரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், நாட்டில் நல்லாட்சி மலர மக்களின் தேவைகளையும் , சமூகத்தில் நீதியையும், சிறுபான்மையினர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியும், அனைத்து சமூக மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை வேண்டியும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு "மக்களின் தேர்தல் அறிக்கை - 2024" ஐ நாடு முழுவதும் வெளியிட்டு விவாதப்பொருளாக்கியுள்ளது. அதனொரு பகுதியாக தமிழகத்தில் தற்போது கோவை மாநகரில் "மக்களின் தேர்தல் அறிக்கையை" மாநிலத் தலைவர் அவர்கள் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில அமைப்புச் செயலாளர் திரு. K. ஜலாலுதீன் அவர்களும், மாநிலச் செயலாளர் திரு. ஷப்பீர் அஹமது அவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர தலைவர் திரு. உமர் ஃபாரூக் அவர்களும், பெருநகரச் செயலாளர் திரு. சபீர் அலி அவர்களும், கோவை மக்கள் தொடர்பு செயலாளர் திரு. அப்துல் ஹக்கீம் அவர்களும் உடனிருந்தனர்.
#PeopleManifesto #JIH #Coimbatore