News Channel

பத்திரிகை அறிக்கை

01 பிப்ரவரி 2024

 "பத்திரிக்கை செய்தி"

 "ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்களுக்கு பூஜை செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்தது அதிர்ச்சியளிக்கிறது. இது அப்பட்டமான சட்ட மீறல் - சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி

 புதுதில்லி: ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்களுக்கு பூஜை செய்ய வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், இது ஒரு சட்டத்தை மீறிய செயல் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) தலைவர் சையத் சஅதத்துல்லாஹ் ஹுசைனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்ய வாரணாசி நீதிமன்றம் அளித்த உத்தரவு எங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த உத்தரவு மூலம், 'வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991' சட்டத்தை வாரணாசி நீதிமன்றம் மீறியுள்ளது. நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே உரிமைக்கோரல் வழக்கில் முக்கிய முடிவை தீர்மானித்துள்ளது. பாதாள அறை மசூதியின் ஒரு பகுதியாக இருப்பதால், அங்கு பூஜையை அனுமதிக்கக் கூடாது.   இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர அன்ஜுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி எடுத்துள்ள முடிவிற்கு ஜமாஅத் ஆதரவு அளிக்கிறது.

வாரணாசி நீதிமன்றத்தின் வினோதமான தீர்ப்புக்குப் பிறகு நடந்த தொடர் நிகழ்வுகள் கவலையளிக்கிறது.
பள்ளிவாசலின் இடத்தை  மோசடியாக அபகரிப்பது பெரும் நாசத்தை விளைவிக்கும். இதை ஜமாஅத் கடுமையாக எதிர்க்கிறது. சட்டத்தை மீறி பள்ளியை அபகரிக்கும் இந்த வேதனைக்குரிய செயலை உடனடியாக தடுப்பது உயர் நீதிமன்றம் கடமையாகும்.

 "வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991' க்கு கட்டுப்பாட்டு நடக்க வேண்டும் கோரிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்." ஆகஸ்ட் 15, 1947 அன்று இருந்த பொது வழிபாட்டுத் தலங்களின் மத அடையாளத்தை பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை இந்த சட்டம் வழங்குகிறது. இந்திய அரசு இந்தச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதை உறுதியாக கடைப்பிடிப்போம் என்று அறிவிக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991- அடிப்படையில் கீழ் நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றங்கள் விரைவாக திரும்பப் பெறுவது மிகவும் அவசியம்.  பாபர் மசூதியின் உரிமைகோரல் வழக்கை தீர்மானிக்கும் போது, இந்திய உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகளை நினைவுபடுத்துவோம். "வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை" விரிவாக மேற்கோள் காட்டி, "இச்சட்டன் மதச்சார்பற்ற அரசின் கடமைகளுடன் உள்ளார்ந்த தொடர்புடையது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.   இது அனைத்து மதங்களின் சமத்துவத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.  எல்லாவற்றிற்கும் மேலாக, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் என்பது அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் என்ற அந்தஸ்தைக் கொண்ட ஒரு நெறிமுறையான, அத்தியாவசியமான அரசியலமைப்பு மதிப்பாக, அனைத்து மதங்களின் சமத்துவத்தைப் பாதுகாக்கவும் அரசுக்கு விதிக்கப்பட்ட புனிதமான கடமையை உறுதிப்படுத்துவதாகும்.  பொது வழிபாட்டுத் தலங்களின் தன்மையைப் பாதுகாப்பதில், வரலாற்றையும் அதன் தவறுகளையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஒடுக்கும் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்று பார்லிமென்ட் நிச்சயமற்ற வகையில் ஆணையிட்டுள்ளது.

 வழங்கியவர்:
 கே.கே.  சுஹைல்
 தேசிய செயலாளர், ஊடகத்துறை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஹெச்கியூஆர்எஸ்
 மொபைல்: 7290010191
 முகவரி: D-321, அபுல் ஃபஸ்ல் என்கிளேவ், ஜாமியா நகர், ஓக்லா,
 புது தில்லி - 110025