News Channel

பத்திரிக்கை செய்தி

*பத்திரிக்கை செய்தி*

சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலை நிறுத்திய தென்னாப்பிரிக்காவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பாராட்டுகிறது. 
உடனடி போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தை ஜமாஅத் வலியுறுத்துகிறது.

புதுடெல்லி:
சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இஸ்ரேலை நிறுத்திய தென்னாப்பிரிக்காவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) அகில இந்தியத் தலைவர் சையத் சஅதத்துல்லாஹ் ஹுசைனி பாராட்டினார். 
உடனடியாக, காஸாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்திய அரசையும் முஸ்லிம் நாடுகளையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காஸாவிற்கு எதிரான போரில் இனப்படுகொலை நடவடிக்கைகளிலிருந்து விலகி இருக்க வேண்டிய கடமையை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 
அதற்கு பின்னர், சையத் சஅதத்துல்லாஹ் ஹுசைனி ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், “சரியான நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த நீதிமன்ற அவையில் இஸ்ரேலைக் கொண்டுவந்து நிறுத்திய தென் ஆப்பிரிக்காவின் துணிச்சலான நடவடிக்கையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பாராட்டுகிறது.  காலனித்துவம், ஆக்கிரமிப்பு மற்றும் நிறவெறிக்கு எதிராக போராடும் தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற மரபுக்கு ஏற்ப, பாலஸ்தீனத்தின் சார்பாக சர்வதேச நீதிமன்றம் அந்நாடு முறையிட்டுள்ளது. 
காஸாவில் இனப்படுகொலைச் செயல்களில் ஈடுபட்டதற்கும், மனித உரிமை சட்டங்கள் தீவிரமாக மீறப்படுவதற்கும் இஸ்ரேல்தான் பொறுப்பு என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இனப்படுகொலை மற்றும் பிரிவு 3-இல் குறிப்பிடப்பட்டு தடை செய்யப்பட்ட செயல்களிலிருந்து காஸா பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் இணங்கி நடப்பதை அறிய தென்னாப்பிரிக்காவுக்கு உரிமையுள்ளது என்றும் சர்வதேச நிதிமன்றம் உறுதியாக கூறிவுள்ளது.’

“சர்வதேச நிதிமன்றத்தின் சில அவதானிப்புகளை குறிப்பாக 54, 78 மற்றும் 79 பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நாங்கள் வரவேற்கிறோம். அதே வேளையில் காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு சர்வதேச நீதிமன்றம் வெளிப்படையாக அழைப்பு விடுக்காததால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின் நேர்மறையான அம்சம் என்னெவெனில், இதனால் இனப்படுகொலையைத் தடுக்கும் இலக்கை அடைய வைக்கிறது. 
மேலும் மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கண்டனமாக இது திகழ்கிறது. பெரும்பாலான முதல்கட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றத்தில் 15-2 பெரும்பான்மை கிடைத்துள்ளது. 
இது இனப்படுகொலைப் போரைத் தவிர்ப்பதற்கு இஸ்ரேலை உடன்பட வைக்க பரந்து நிலவும் ஒருமித்த கருத்தை சுட்டிக் காட்டுகிறது. காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க இந்திய அரசு, சர்வதேச சமூகம் மற்றும் முஸ்லிம் நாடுகளை ஜமாஅத் வலியுறுத்துகிறது. காஸா பகுதியில் விரோதத்தை போக்கவும், அமைதியை நிலை நாட்டவும் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீதான அழுத்தத்தை நீட்டிக்க வேண்டும்” என ஜமாஅத் தலைவர் கூறினார்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02qyR28sg8VonsewFURaX5YUwALpVvhvqFKsRZiNTfweZia6HuWZyJNDe3sPu9KMGel&id=100066692652338&mibextid=Nif5oz

வழங்கியவர்:
கே.கே.  சுஹைல்
தேசிய செயலாளர், ஊடகத்துறை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்,
மொபைல்: 7290010191
முகவரி: D-321, அபுல் ஃபஸ்ல் என்கிளேவ், 
ஜாமியா நகர், ஓக்லா,
புது தில்லி - 110025