News Channel

மாணவ மாணவிகளுக்கான அழைப்பியல் பயிற்சி பட்டறை கும்பகோணம்

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை சார்பாக மாணவ மாணவிகளுக்கான அழைப்பியல் பயிற்சி பட்டறை கும்பகோணம் KMSS அரங்கத்தில் 30.12. 2023 அன்று நடைபெற்றது.  
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நிகழ்த்தியவர் சகோதரர் அப்துல் ரஹ்மான் திருநாகேஸ்வரம். 
நிகழ்ச்சியின் முதலாவதாக கிராத் ஓதி தொடங்கி வைத்தவர் சகோதரி சுமையா யாசிர் கும்பகோணம் GIO தலைவர். 
SIO தஞ்சாவூர் மாவட்ட தலைவர் சகோதரர் அஹமத் தஸ்லீம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.
தலைமை உரை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் சகோதரர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் ஆற்றினார்கள்.
சிறப்புரை மதுரையில் இருந்து வருகை புரிந்த மௌலவி முஹம்மது முஹைதீன் உமரி அவர்கள் அழைப்புப் பணி ஏன் எதற்கு என்ற தலைப்பில் சிறப்பான விளக்கத்தை மாணவ மாணவியர்களுக்கு சுலபமாக அறியும்படி உரை நிகழ்த்தினார்கள்.
கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர் சகோதரர் V. ஃபக்ருதீன் அலி அகமத் அவர்கள் அழைப்பு பணியின் நோக்கமும் வழிமுறைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
மாணவன் மாணவிகள் அழைப்பு பணி குறித்து சந்தேகங்களை கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்டு தெளிவு பெற்றனர்.
தேனீர் இடைவேளை கொடுத்து அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. 
இறுதியாக  ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட அமைப்பாளர் சகோதரர் முகமது யூனுஸ் அவர்கள் நிறைவுறை ஆற்றினார்கள்.
 கலந்து கொண்டவர்கள்: மாணவர்கள் 50 நபர்கள் மாணவிகள் 50 நபர்கள் மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடந்து முடிந்தது எல்லா புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே