டிசம்பர் 24 2023 JIH திருச்சி மண்டல அளவிலான ஊழியர்களுக்கான ஒரு நாள் தர்பியா நிகழ்ச்சி மணப்பாறை தக்வா பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மணப்பாறை, துவரங்குறிச்சி, புதுக்கோட்டை,தஞ்சாவூர், உப்பிலியபுரம் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள உறுப்பினர்கள்,ஊழியர்கள் மற்றும் அபிமானிகளும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் சுமார் 80 பேர் கலந்து கொண்டார்கள் அவர்களுடன் சுமார் 20 அபிமானிகளும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தஞ்சை சகோதரர் முகமது ரியாஸ் அவர்கள் அல்குர்ஆன் சூரா ஹதீதில் வசனம் 57:11 -16
வரையிலான வசனங்களுக்கு குர்ஆன் விளக்க உரையாற்றினார்கள்
அதில் அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுப்பவர் யார் அவர்களுடைய நிலை என்ன என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்கள் .
விமர்சனம் செய்யும் மக்களின் கேள்விக்கான அல்லாவின் பதில் மற்றும் வாக்குறுதியையும் மேலும் சைத்தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதியையும் அதில் எது நிலையானது என்பதையும் அழகான முறையில் விளக்கினார்கள்.
பின்னர் நிகழ்ச்சியில் தஸ்கியா தொடர்பாக JIH மண்டல அமைப்பாளர் சகோதரர் G.சையத் முஹம்மது அவர்கள் Power Point விளக்க உரையாற்றினார்கள்.
தஸ்கியா (உளத்தூய்மையை )எங்கிருந்து ஆரம்பிப்பது அது ஆன்மா மற்றும் உள்ளத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வருவதற்கும் அதற்கு அடிப்படையான விஷயங்களும் தெளிவான முறையில் விவரிக்கப்பட்டது. உளத்தூய்மை இல்லாத செயல்பாடுகள் திட்டங்கள் அமைப்புகள் எப்படி சீர்கெடும் உளத்தூய்மையுடன் செயல்படுபவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு உயர்வடையும் என்பதை தெளிவாக PPT மூலம் விளக்கினார்.
நிகழ்ச்சியின் சிறப்புரையாக "மாறியது நெஞ்சம் மாற்றியது ஜமாஅத்" என்கின்ற தலைப்பில் திண்டுக்கல் JIH தலைவர் சபீர் அகமது சாஹிப் உரையாற்றினார்கள்.
அவர்கள் தமக்கு இயக்கத்தின் மீதான நல்லெண்ணங்களும் அதன் மீதான ஈடுபாடுகளும் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான நிகழ்வுகளும் எவை என்பதை கூறினார்.
ஊழியர்கள் மற்றும் அபிமானிகள் இயக்கத்தின் மீதான நல்லெண்ணங்களும் ஈடுபாடும் ஏற்படுவதற்கான தங்களின் சொந்த அனுபவங்களை விளக்குவதற்கு வாய்ப்பு கொடுத்தார்.
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பல்வேறு உறுப்பினர்களும் இயக்கத்தின் மீதான தங்கள் அபிமானம் ஏற்படுவதற்கான காரணங்களை தெரிவித்தனர் .
மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர்.
அமானுல்லா (அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி-இயக்குநர்) அவர்கள் மிஷனை நோக்கிய stratagic planning என்கின்ற- PPT presentation&Work shop நிகழ்ச்சியை நடத்தினார்.
அதில் ஒவ்வொரு பகுதியை சேர்ந்த உறுப்பினர்களும் தனித்தனியே கலந்தாய்வு வட்டங்களை உருவாக்கி தங்கள் செயல்பாடுகளில் உள்ள குறை நிறைகளையும் இலக்குகளையும் அதனை அடைவதற்காக தங்களிடம் உள்ள சாத்தியமான கூறுகளை பற்றி கலந்தாய்வு நடத்தினர்.
தாங்கள் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் சாத்திய கூறுகள் மற்றும் கள விவரங்களை சரியாக தேர்வு செய்த பின்பு அந்தந்த பகுதிகளில் எவைத்தலையான பிரச்சினைகள் என்றும் அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜமாத் கூறும் வழிமுறைகளை பயன்படுத்துவதை குறித்தும் அதற்கான திட்டங்களை பயன்படுத்துவது குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் JIH மணப்பாறை தலைவர் ஜபருல்லாஹ் நன்றியுரை வழங்கினார்.
மாலை 4:30 மணி கூட்டம் இனிதே நிறைவுற்றது.