ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் மற்றும் மக்கள் தொடர்பு செயளாலர்
ஜனாப். S.N.சிக்கந்தர் சாஹிப் அவர்கள் திருப்பூர் வருகை தந்திருந்தார்.
அது சமயம் சமூக நல்லிணக்க பேரவை ஏற்படுத்த மற்றும் பிரமுகர்களை சந்திக்கும் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்த நிகழ்வில் திருப்பூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநகரத் தலைவர் ஜனாப். A.முஹம்மது காசிம் அவர்கள் தலைமையில்
அழைப்பாளர் A.அன்வர்தீன் திருப்பூர்
மக்கள் தொடர்பு செயலாளர்
ஜனாப். அப்துல் ரசீத்
திருப்பூர் ஊடகப் பொருப்பாளர் ஜனாப். இஸ்ஹாக்
ஜனாப். ராஜா முஹம்மது ஆகியோர் கொண்ட ஒருங்கினைந்த குழுவுடன் சந்திப்புகள் நடைபெற்றது
நம்மை சுற்றி அமைதியான நிலையை உருவாக்குவது நம் பணிகளில் ஒன்று
இன்று நமக்கும் நம்முடன் இருக்கும் மற்ற சமூதாயங்களுக்கும் ஃபாசிசம் மிக அச்சுறுத்தலாக இருக்கிறது
இது இஸ்லாமிய சமூகத்தை மட்டும் பாதிக்கும் நிகழ்வு அல்ல_
இன்றைய சூழல்களில் அரசியல் காரணங்களினால் சமூகங்கள் நசிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமூகங்கள் மத்தியில் ஒற்றுமைகள் குறைந்து காணப்படுகிறது.
தீங்கு யாருக்கு வந்தாலும் அது தீங்கு தான் இன்று ஃபாசிசத்தால் சிறுபான்மை சமூகம் தாக்கப்படுகிறது என்றால் அந்த சமூகம் அடையும் இன்னல்களை விட
வேடிக்கை பார்த்து கொண்டுயிருக்கும் பெரும் சமூகம் சொல்லாத என்னற்ற பாதிப்புகளுக்கு அடக்குமுறைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.
துரதிஷ்டம் என்ன என்றால் அவற்றை பற்றி அவர்கள் அறியாமல் ஃபாசிச சக்தியை ஆதரித்து கொண்டு உள்ளனர்.
இந்த கொடிய நோய் அனைவரையும் காவுவாங்கி விட கூடாது என்ற அழுத்தமான விழிப்புணர்வை மக்களிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும்.
மேலும் சமூகங்களின் அடையாளமாக இருக்க கூடியவர்களிடம் இந்த குறிக்கோளை கொண்டு செல்லும் போது அதன் தாக்கம் பாமரமக்களையும் சென்றடையும் என்பதால்
பல சமூக பிரமுகர்களை சந்தித்து இன்றைய நிலைகளை பற்றியும் இதனால் பாதிப்பு அனைவருக்குமானது என்ற உண்மையை எடுத்துரைக்க
சமய நல்லிணக்க பிரமுகர்கள் சந்திப்பு நடைபெற்றது
இந்நிகழ்வில்
ஆர்.சி.சி தேவாலயம் திருச்சபை தந்தை மரியாதைகுரிய ஜெப மாலை ராஜ் அவர்களை சந்தித்து சிறுபான்மையினர் நிலைகள் சட்டத்தால் ஏற்படகூடிய பாரதூர விளைவுகள் பற்றி கலந்துரையாடல் இனிதாக அமைந்தது
திருப்பூர் பிரபலானவர் நல்ல சமூகசேவை பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கிட்ஸ் கிளப் பள்ளியின் தலைமை பொருப்பாளர் திரு. மோகன் கார்த்திக் அவர்களுடனான சந்திப்பு மிக அருமையாக அமைந்தது சமூக பார்வையுடன் அவருடைய சிந்தனை மேலும் இஸ்லாமியர்களுடனான நட்பு என அகமகிழ்வை ஏற்படுத்தியது
பெந்தகோஸ்து தேவாலயம் பாஸ்டர் திரு. ஆனந்த் அவர்களை சந்தித்திதோம்
பாசிச குழுவால் ஏற்பட்ட காயத்தையும் இரணங்களையும் பகிர்ந்து கொண்டார் சமூக நல்லிணக்கம் ஏற்படுத்த எப்ப வேண்டுமானாலும் அழையுங்கள் உங்களுடன் நானும் களம் காண தயார் என்ற வார்த்தைகள் மேலும் வலுசேர்த்து
திருப்பூர் அறிவியல் கழகம் நிர்வாகியான கெளரி சங்கர் அவர்களை சந்தித்தோம் மாணவர்களிடத்தில் எத்தகைய அறிவியலுடன் சற்றும் உடன்படாத பாடங்களை ஃபாசிச சித்தாந்தம் தினிப்பை பற்றியும் வருங்காலம் சீர்படுத்த வேண்டும் முதலில் கேள்வி எழுப்பகூடிய சமூதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்ற பார்வையுடன் சந்திப்பு மிக அழகாக அமைந்தது
திருப்பூர் குர்பானி அறக்கட்டளை ஜனாப். ஃபைசல் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு மிகவும் இணக்கமாக அமைந்தது அருமையான உரையாடல்கள் இடம்பெற்றன மாற்று சமூதாய மக்கள் பிரமுகர்கள் நம் சமூக மத்தியில் பணிசெய்ய உறுதியாக உள்ளதையும் தோலோடு தோல் கொடுக்க தயாராக உள்ளார்கள் நம் சமூகம் அதை ஏற்க தொய்வு காட்டுவதையும் தற்போது உலமாக்கள் இதை புரிந்து கொண்டு இருக்கிறார்கள் மாற்றம் நிகழும் என்பதையும் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார் மிக கண்ணியமான உரையாடல் பகிர்வுகள் நடைபெற்றன
இறுதியாக ஜமாஅத் உறுப்பினர்கள், ஊழியர்கள் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
களங்கள் உள்ளது செயல்படுவதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்று
அனைவரிடமும் எடுத்துரைக்கப்பட்டது.