News Channel

ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள் வினியோகம்

ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உடுமலை கிளை மகளிரணி சார்பாக 16.08. 2025  சனிக்கிழமை அன்று இரவு உணவு பொட்டலங்கள் ஏழை, எளியோர்க்கு வழங்கப்பட்டது.

விதவைகள், இயலாமல் வாடும் வயதானவர்கள், அநாதை  குழந்தைகள் உள்ளிட்ட வர்களுக்கு  உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது.

உணவை வாங்கும்போது மிகுந்த மகிழ்ச்சியுடனும், அவர்களின் கஷ்டங்களையும் கூறி அழுதனர். பிறகு நாம் அவர்களுக்கு இறைவனை நம்புங்கள் அவன் உங்களுக்கு உதவுவான்  என்று ஆறுதல் கூறினோம்.

அவர்களின் இயலாமை நீங்கி வளமான வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைனிடம் பிரார்த்தனைகள் செய்தோம்..!

இந்த நிகழ்வில் உடுமலை ஜமாஅத் மகளிர் அணியின் தலைவி சகோதரி: மெமஹராஜ் சான் பாட்சா  அவர்கள் தலைமையில் ஊழியர்கள் பங்கெடுத்து உதவிகள் செய்தனர்.