அனைவருக்கும் முன்மாதிரி அண்ணல் நபிகளார் (ஸல்) என்கின்ற மைய கருத்தில் மீலாது நபி சிறப்பு நிகழ்ச்சி கோடாங்கி பட்டியில் 14/10/2023 அன்று நடைபெற்றது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிமுகப்படுத்தும் விதமாக கோடாங்கி பட்டியில் வாழும் சகோதர சமுதாய மக்களுக்கும் உள்ளூர் ஜமாத் மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இஸ்லாம் மீதும், முஸ்லிம்கள் மீதும் பரப்பப்படுகின்ற அவதூறு பிரச்சாரத்தை வெறுப்பு மனநிலையை ஏற்படுத்துகின்ற இந்த சூழ்நிலையில். இந்நிகழ்ச்சியை பயன்படுத்தி அந்த தவறான பிரச்சாரங்கள் பொய் என்று கூறும் வகையில் இஸ்லாம் என்பது மனித குலத்துக்கான மார்க்கம் அமைதியான மார்க்கம் மனிதர்கள் இந்த உலகில் அமைதியாக மகிழ்ச்சியாக சிறப்பாக கண்ணியமாக ஒழுக்கமாக வாழ வைப்பதற்காக வழிகாட்டியாக வருகை புரிந்திருக்கிறது அந்த மார்க்கத்தை வாழ்ந்து காண்பிப்பதற்காக இறைவனால் தேர்ந்தெடுத்தவர்தான் இறுதி நபியான முகமது நபி (ஸல்) அவர்கள்.
இன்று உலக அளவில் இஸ்லாத்தின் மீது முஸ்லிம்கள் மீதும் குற்றம் சுமத்தப்படக்கூடிய அத்தனையும் பொய் அவர்கள் செய்கின்ற வெறுப்பு பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டிருக்க கூடிய மக்கள்மீது குற்றமல்ல அது அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதால் அதை அவர்கள் உண்மை என்று நம்பி இருக்கிறார்கள். அது தவறு அது பொய் என்பதை முஸ்லிம்களாகிய நாங்கள் தான் அதை சொல்ல முடியும் ஏனென்றால் குர்ஆனும் நபியினுடைய வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்பதை கூறுகின்ற பொழுதுதான் உங்களுக்கு தெளிவாக தெரியும் ஆக இந்த நிகழ்வின் மூலமாக நாங்கள் இதை தெளிவுபடுத்துகிறோம். இதுதான் இஸ்லாம் என்கின்ற வகையிலே இஸ்லாத்தைக் குறித்தும் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்வை குறித்தும் அழகிய முறையிலே வருகை புரிந்த மக்களுக்கு " JIH-ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்ட பொறுப்பாளர் ஜனாப்: நஜீர் ஹுசைன் அவர்கள் சிறப்புரையாற்றி வருகை புரிந்த அனைவருக்கும் இஸ்லாத்தினுடைய செய்தியை மிக அழகிய முறையில் இந்நிகழ்வின் மூலமாக இஸ்லாத்தின் தூய வழிமுறையை வாழ்க்கை முறையை விளங்கும் வகையில் எடுத்துரைத்தார் .
நிகழ்ச்சியின் துவக்கமாக கோடங்கிபட்டி ஜும்மா பள்ளிவாசல் இமாம் ஆலிம் அபூபக்கர் தாஃவதி அவர்கள் இறைமறை வசனத்தை ஓதி நிகழ்ச்சியை அளகுற வழிநடத்தி அமைத்து தந்தார்கள்.
இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டார்கள் வருகை புரிந்த அனைவருக்கும் தேனீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு விழாக்கோலம் போல இந்நிகழ்வு அமைந்து அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தன.