மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் என்ற தேசிய அளவிலான பரப்பரையை முன்னிட்டு
ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மங்களம் கிளை மகளிர் அணி சார்பாக பரப்புரை நிறைவு விழா நடைபெற்றது.
27/7/2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 4 மணிக்குமங்கலம் மஸ்ஜிதுல் இக்லாஸ் வேட்டுவபாளையம் பகுதியில் Cio வின்பேரணி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து 5 மணி அளவில்
கிராஅத்... ஜனாப் : ஹாபிழ் நிசாருத்தீன் (மஸ்ஜிதுல் இக்லாஸ் இமாம்) அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.
ஜனாப் : A அப்துல்வதூத் ( jih மங்கலம் கிளை தலைவர்) அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
'இன்றைய சூழலில் பெற்றோர்களின் பொறுப்புகள்'
என்ற தலைப்பில் ஜனாப் : நஜீர் ஹுசைன் ( jih தென் மண்டல பொறுப்பாளர் அழைப்பியல் துறை) அவர்கள்சிறப்புரை நிகழ்த்தினார்.
ஜனாப் : S அப்துல் ரஷீத் ( jih மங்கலம் கிளை செயலாளர்) அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து நன்றி உரை நிகழ்த்தி ஜமாஅத் அறிமுகம் மற்றும் பணிகள் குறித்து பேசினார்.
இறுதியாக பரப்புரையை முன்னிட்டு மங்கலத்தில் 5 பகுதியில் நடந்த ஓவிய போட்டிக்கான பரிசும் 80சான்றிதழ்களும் Cio மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இயற்கை தொடர்பான project மற்றும் கையெழுத்திட்டு மரம் வளர்ப்போம் என்ற உறுதிமொழி எடுத்தார்கள்.
இந்நிகழ்வில் Jih ஆண்கள் வட்டம், பெண்கள் வட்டம் |Sio, மற்றும் ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் பங்களிப்பு செய்தார்கள்.
பின்பு டீ, Snaks மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துல்லாஹ்!