News Channel

மரம் நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மறவாய்க்குடி 
JIH-ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் CIO - children Islamic organisation சார்பாக நாடு தழுவிய அளவில் 
"மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" 
என்ற தலைப்பில் பரப்புரை நடத்தப்பட்டு வருகின்றது. 

மறவாய்க்குடி இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் 
Jih-சார்பாக கடந்த 26.7.2025 சனிக்கிழமை அன்று நாடு தழுவிய அளவில் மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள் என்ற பரப்புரையின் ஒரு பகுதியாக சிக்கல் பகுதியில் உள்ள மறவாய்க்குடியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் மறவாய்க்குடி பள்ளிவாசல் இமாம் சேக் முகமது ஆலிம்  அவர்கள் தலைமையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நடைபெற்ற நிகழ்வு;

1.மரக்கன்று நடுதல்
2.ஓவியம் வரைதல்
3.சிற்றுரை..
4.கவிதை பாடுதல்
ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாணவர்களின் உரையில் 

மரங்கள் வெள்ளத்தைத் தடுக்கவும் உதவுகின்றன. மழைத்துளிகளைத் தடுத்து மழைநீரை மெதுவாக்குகின்றன, இதனால் மழைநீர் தரையை அடைவதற்கு முன்பு சிறிது ஆவியாகிவிடும்.

மரங்கள் தண்ணீரை உறிஞ்சி, அவற்றின் வேர்கள் மண்ணில் வேகமாக ஊடுருவ உதவுகின்றன. இதன் விளைவாக மேற்பரப்பு ஓட்டம் குறைந்து, அதிக நீர் சேமிப்பு ஏற்படுகிறது.

பறவைகளுக்கு கூடு அமைக்க,
விலங்குகளுக்கு உணவளிக்க,
மரம் நடுவோம்!

மரம் நடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம்! 

இந்த நிகழ்வில் 15 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் மொத்தம் 15 மாணவ , மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

- JIH- ISLAMIC CENTRE CIRCLE