News Channel

மரங்களின் முக்கியத்துவம்

கடையநல்லூர் கிளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் வட்டம் CIO சார்பாக சனிக்கிழமை 26.07.25 அன்று தென்காசியில் நடைபெற்ற அபிமானிகள் வகுப்பில் 28 பேர் கலந்து கொண்டனர். இதில் “மண்ணில் கைகள், இந்தியாவின் இதயங்கள்” என்ற பரப்புரையை முன்னிட்டு வகுப்பு நடைபெற்றது. நிகழ்ச்சி சகோதரி சக்கீலா அவர்கள் திருக்குர்ஆன் ஓதியதன்மூலம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து சகோதரி சமீமா அவர்கள் மரங்களின் முக்கியத்துவம் குறித்து ஹதீஸ்களைச் சொன்னார்; பின்னர் சகோதரி பானு அவர்கள் மரங்களின் பயன்கள், மரங்களை வெட்டுவதால் ஏற்படும் தீவிர விளைவுகள் மற்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள மரங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ், இறுதியில் மதரசா குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி, அவை ஏன் நட்டல் வேண்டும் என்பதை எடுத்துரைத்தோம்; குழந்தைகள் ஆர்வத்துடன் மரங்களை நட்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்கள்.