கும்பகோணம்: ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின்
கும்பகோணம் கிளை சார்பாக தர்பியா நிகழ்ச்சி இன்று (24/07/2025, வியாழக்கிழமை) காலை 10:30
மணி முதல்
நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் கும்பகோணம் கிளை தலைவர் ஜனாப். அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் தலைமை தாங்கினார்.
முதல் அமர்வு:
நிகழ்ச்சி நடத்தியவர்: சகோதரர் ஹாஜா மாலிக்.
திருக்குர்ஆன் விரிவுரை: மௌலவி அகமது கபீர் ஹஜ்ரத் (இமாம், நைல் நகர் மஸ்ஜித், கும்பகோணம்) அவர்களால்
நிகழ்த்தப்பட்டது.
தலைமை உரை: ஜனாப் அப்துல் கலாம் ஆசாத்
அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
சிறப்புக் கலந்துரையாடல்: "மாற்றம் இல்லையேல், முன்னேற்றம் இல்லை" என்ற தலைப்பில், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின்
திண்டுக்கல் கிளை தலைவர் ஜனாப் சபீர் அஹமத் அவர்கள் பவர் பாயிண்ட்
விளக்கக்காட்சியுடன் உரையாற்றினார்.
கேள்வி-பதில் நிகழ்ச்சி: பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது.
முதல்
அமர்வு 12:45 மணிக்கு முடிவடைந்து, லுஹர் தொழுகை மற்றும் உணவு இடைவேளை.
இரண்டாவது அமர்வு: (மதியம் 2:00 மணி)
நிகழ்ச்சி நடத்தியவர்: சகோதரர் முகமது ரியாஸ்.
சிற்றுரை: ஜனாப் முகமது யூனுஸ் அவர்கள் "ஜமாத்தின் நோக்கமும் நமது
செயல்பாடும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
புத்தக ஆய்வு: "இயக்கமும் இனிய உறவுகள்" என்ற புத்தகத்தின் அடிப்படையில்
மௌலவி பி. நாசர் புகாரி அவர்களின் தலைமையில் புத்தக ஆய்வு நடைபெற்றது.
பங்கேற்பாளர்கள்:
சகோதரர் ஏ. ஹாஜா மாலிக் (அத்தியாயம் 1)
சகோதரி ரஹ்மத்நிசா (அத்தியாயம் 2)
சகோதரி எம். ஹசீனா ("இயக்க உறவுகள் - தவிர்க்க
வேண்டியவை")
சகோதரர் சாதிக் பாட்ஷா ("இயக்க உறவுகள் - செய்ய
வேண்டியவை")
தொகுப்புரை: மௌலவி நாசர் புகாரி.
நன்றி உரை: சகோதரர் பி. எஸ். யூசுப்.
இந்நிகழ்ச்சியில்
80 க்கு மேற்பட்ட ஊழியர்கள்,
உறுப்பினர்கள் மற்றும் அபிமானிகள் கலந்து கொண்டனர்.