11/10/2023 அன்று மாலை 6:30 முதல் இரவு 8 மணி வரை அனைவருக்குமானவர் அண்ணல் நபிகளார் (ஸல் )என்கின்ற மையக்கருத்தில் காண்டை பகுதியில் மீலாது சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நடைபெற்ற நிகழ்ச்சியில் சகோதர சமுதாயத்தை சேர்ந்த மக்களும், முஸ்லிம் ஜமாத்தார்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் மூலமாக இஸ்லாத்தின் தன்மைகளையும், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்வு முறையையும் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இஸ்லாம் என்றைக்குமே மனித குலத்துக்கு அமைதியையும் நல்வழியையும் காட்டக்கூடியது. நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் நபியாக வரவில்லை, அனுப்பப்படவில்லை. மனித குலம் முழுமைக்காக அவர் நபியாக வருகை தந்தார், வாழ்ந்து காண்பித்தார். இறைவன் நபியை குறித்து அறிமுகம் செய்கின்ற பொழுது அனைத்து உலகிற்கும் அருட்கொடையாகவே நாம் இந்த நபியை அனுப்பினோம் என்று கூறிய செய்தியை அடிப்படையாக வைத்து நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளை உரையின் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு சிறப்புரை நிகழ்த்துவதற்காக JIH-ஊழி வட்ட பொறுப்பாளர் ஜனாப்: நஜீர் ஹுசைன் அவர்கள் வருகை புரிந்து அழகிய முறையில் மக்களுக்கு செய்திகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியை காண்டை ஜும்ஆ பள்ளிவாசல் இமாம்
மௌலவி அப்துல் மாலிக் அவர்கள் தலைமையேற்று நடத்தி கொடுத்தார்.
இந்நிகழ்வில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 75 நபர்கள் கலந்து கொண்டனர் . ஜமாத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.