தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் உள்ள ஜன்னத்துல் பிர்த்ஹவுஸ் அரபி மதரஸா ஆலிமா வகுப்பு மாணவிகள் 20 பேர் திருக்குரான் முழுவதையும் 24 மணி நேரத்தில் கைகளால் எழுதி முடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதற்கான சாதனை முயற்சி வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் டேலண்ட் கவுன்சி லுடன் இணைந்து மேற் கொள்ளப்பட்டது. இந்த சாதனை முயற்சியில் வெற்றி பெற்ற 20 மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவிற்கு அன்னைகல்வி குழும தாளாளர் அப்துல் கபூர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மாணிக்க வாசுகி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் S.N. சிக்கந்தர், தொண்டி முஸ்தபா, எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க நிறுவனர் சலீம், முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.