News Channel

தமிழகத்தில் முதன்முறையாக குழந்தைகள் நடத்திய "பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு" நிகழ்ச்சி – கோவையில் சிறப்பாக நடைபெற்றது!

தமிழகத்தில் முதன்முறையாக குழந்தைகள் நடத்திய "பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு" நிகழ்ச்சி – கோவையில் சிறப்பாக நடைபெற்றது!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) - ன் குழந்தைகள் பிரிவான Children Islamic Organisation (CIO) சார்பில் நாடு தழுவிய பரப்புரையான "மண்ணில் கைகள், இந்தியாவில் இதயங்கள்!" என்ற தலைப்பின் கீழ் பல்வேறு நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இந்த பரப்புரையின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் முதன்முறையாக குழந்தைகளே நேரடியாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இன்று (9 ஜூலை 2025) கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாநகர CIO பிரிவின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வை CIO கோவை மாவட்ட துணைத் தலைவர் சிறுமி. ஜைனப் வழிநடத்தினார். பத்திரிக்கையாளர்களை வரவேற்று நிகழ்ச்சிக்கு ஓர் இனிய தொடக்கத்தை அளித்தார்.

தொடர்ந்து, CIO கோவை மாவட்டத் தலைவர் சிறுமி. நபீலா கரம் தலைமையேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். தனது உரையில்,

- CIO அமைப்பு குழந்தைகளிடையே மேற்கொண்டு வரும் பயனுள்ள பணிகள்,

- "மண்ணில் கைகள், இந்தியாவில் இதயங்கள்!" என்ற தலைப்பின் பின்னுள்ள நோக்கம் மற்றும் அவசியம்,

- கோவை மாநகரில் இப்பரப்புரையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய விரிவான விளக்கங்களைத் தந்தார்.

பின்னர், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சிறுமி. நபீலா கரம் தெளிவாகவும் தைரியமாகவும் பதிலளித்ததோடு, CIO குழந்தைகளும் நிகழ்வில் ஈடுபாடுடன் பங்கேற்று தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தனர்.

இந்நிகழ்வு ஊடக நண்பர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றதோடு, குழந்தைகளின் தலைமைத்துவத் திறனையும், சமூக விழிப்புணர்வையும் வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாக இப்பத்திரிகையாளர்கள் சந்திப்பு அமைந்தது.