News Channel

சமூக மேம்பாடும் நமது பொறுப்புகளும் எனும் சிறப்பு அரங்க கூட்டம்

மேலக்காவேரி, 19.07.2025:
மேலக்காவேரி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் மேலக்காவேரி இஸ்லாமிய சோசியல் வெல்ஃபேர் அசோசியேஷன் (மிஸ்வா) இணைந்து நடத்திய "சமூக மேம்பாடும் நமது பொறுப்புகளும்" எனும் சிறப்பு அரங்க கூட்டம் இன்று (19.07.2025, சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மேலக்காவேரி பள்ளிவாசல் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.
தலைமை: ஜனாப் எம். அபுல் கலாம் ஆசாத் (தலைவர், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், கும்பகோணம் கிளை). முன்னிலை வகித்தவர்கள்:
ஜனாப் எம். முஹம்மது அபூபக்கர் (பள்ளிவாசல் நாட்டாமை),  ஹாஜி முஹம்மது (பள்ளிவாசல் செயலாளர்), ஜனாப் எஸ். அப்துல் ரஷீத் (பள்ளிவாசல் பொருளாளர்), ஜனாப் ஏ. ஜாபர் பாஷா (துணைச் செயலாளர்), ஜனாப் ஏ. ஆசாத் அலி (மிஸ்வா தலைவர்)
சிறப்புரை: மௌலவி பி. முஹம்மது நாசர் புகாரி (மாநில செயற்குழு உறுப்பினர், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: முகமது யூனுஸ் (ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்) 
சமூக ஒற்றுமை, கல்வி, ஏழைகளுக்கான உதவிகள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்களின் பங்களிப்புகள் குறித்தும், "சமூக முன்னேற்றத்தில் ஒவ்வொருவரும் தம் கடமையை உணர வேண்டும்" என்று வலியுறுத்தினார். "இஸ்லாம் சமூக நீதி மற்றும் சேவையை ஊக்குவிக்கிறது; இளைஞர்கள் இதில் முன்னணியில் இருக்க வேண்டும்" என்று கூறினார். ஒற்றுமையான செயல்பாடுகள் மூலமே சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை எடுத்துக்காட்டினார்.
50 நபர்கள் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் இத்தகைய நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.