"சாலிடாரிட்டி மாநில பொறுப்பாளர்கள்"
முகாம் 6. 7. 2025 ஞாயிறு அன்று ஏற்காடு ஜாமியா பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் சாலிடாரிட்டி மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் துவக்கமாக சேலம் மாவட்ட தலைவர் சகோ. முஹம்மத் சிராஜ் அவர்கள் குர்ஆன் விரிவுரை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சாலிடாரிட்டியின் காப்பாளர் ஜனாப். மௌலவி முஹம்மது ஹனிபா மன்ஃபயி அவர்கள் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சாலிடாரிட்டியின் website துவக்க விழா நடைபெற்றது. இதனை மௌலவி. ஹனிபா மன்ஃபயி அவர்கள் துவங்கி வைத்தார்.
மேலும்
ஜமாஆதே இஸ்லாமி தமிழகத்தில் சாதித்தது என்ன என்கிற தலைப்பில் நமது ஜமாஆதே இஸ்லாமி மாநில அமைப்பு செயலாளர் k. ஜலாலுதீன் அவர்கள் விளக்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சகோ. சபீர் அஹமது அவர்கள் சாரிடாரிட்டி இரண்டு (2025-2027) வருடத்திற்கான கொள்கை விளக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
மேலும் ஜமாத் மாநில தலைவர் மற்றும் செயலாளர் உடன் கலந்துரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதிய இடைவெளிக்கு பிறகு . சமூக வலைதள பயன்பாடு மற்றும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை சமூக வலைதள வல்லுநர்கள் விளக்கினர்.
அதனைத் தொடர்ந்து போதை மறுவாழ்வு மையம் குறித்தான விளக்கங்களை டாக்டர். நியமத்துல்லா அவர்கள் வழங்கினார்.
மேலும் தலைமைத்துவம் என்கிற தலைப்பில் சாலிடாரிட்டி முன்னாள் மாநில தலைவர் டாக்டர். அப்துல் ஹக்கீம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சாலிடாரிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி. நாசர் புகாரி அவர்கள் சாலிடாரிட்டியும் பிற இயக்கங்களும் என்கிற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மேலும் ,சாலிடாரிட்டி அமைப்புச் சட்டம் குறித்தான விளக்கத்தை மாநில செயலாளர் சகோ. ஹபீப் ரஹ்மான் அவர்கள் வழங்கினார். இறுதியாக சாலிடாரிட்டி மாநில தலைவர் சகோ.முஹம்மது ரியாஸ் அவர்களுடைய நிறைவுறையுடன் நிகழ்வு நிறைவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேலம் சாலிடாரிட்டி உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு தமிழ்நாடு