News Channel

பத்திரிக்கை அறிக்கை

பத்திரிக்கை அறிக்கை

05.07.2025

நாட்டின் துயரச் சம்பவங்கள் தொடர்ந்து நேரும் நிலையில் மக்கள் பாதுகாப்புக்கான உடனடி மாற்றங்கள் தேவை:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH)

புதுதில்லி:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் 
பேராசிரியர் சலீம் அவர்கள் சமீபத்தில் ஏற்பட்ட Telangana தொழிற்சாலை வெடிப்பு, 
Puri Rath Yatra நிகழ்வில் ஏற்பட்ட நெரிசல், 
Ahmedabad விமான விபத்து ஆகியவற்றில் உயிரிழந்தோர் தொடர்பாக ஆழ்ந்த துயரமும் கவலையும் தெரிவித்துள்ளார்.

மாதாந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

“சமீபத்தில் அகமதாபாத், 
பூரி, மற்றும் தெலுங்கானாவில் நிகழ்ந்த மூன்று துயரச்சம்பவங்களும் நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளன. 

அரசு தரப்பில் வழங்கப்பட்ட இழப்பீடுகள் மற்றும் விசாரணைகள் வரவேற்கத்தக்கவைதான். 
ஆனால் இவைகள் மட்டுமே பயனில்லை
கட்டமைப்பு குறைபாடுகளை சரியாக கையாளப்பட வில்லை.

சம்பவ விவரங்கள்:

ஜூன் 30, 2025: 
Telangana-வில் உள்ள Sigachi Industries மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் 40 தொழிலாளர்கள் உயிரிழந்து, பலர் காயமடைந்தனர்.

ஜூன் 29, 2025: 
Puri-யில் Gundicha கோவில் அருகே நடந்த Rath Yatra நிகழ்வில் 3 பேர் உயிரிழந்து, 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அகமதாபாத் விமான விபத்து: விமானப் பாதுகாப்பு மற்றும் அவசர நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளைப் வெளிப்படுத்தியது.


JIH பரிந்துரை செய்த முக்கிய நடவடிக்கைகள்:

நாட்டின் அனைத்து பாதுகாப்பு சட்டங்கள், விதிகள் மற்றும் அவசரநிலை செயல்முறைகளை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

தொழிற்சாலைகள், நிகழ்வுகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அமைப்புகள் ஆகிய அனைத்திற்கும் ஒரே மாதிரியான, கட்டாய பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட வேண்டும்.

கூட்டம் கட்டுப்பாடு மற்றும் விமானப் பாதுகாப்பு முறை சிறப்பாக மாற்றப்பட வேண்டும், குறிப்பாக மத மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் நகரப் போக்குவரத்து தொடர்பாக.
நிகழ்நேர கண்காணிப்பு, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், 
மற்றும் பாதுகாப்பு குழுக்கள் ஊரக மற்றும் தேசிய மட்டங்களில் வலுப் படுத்தப்பட வேண்டும்.
தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், பாதுகாப்பு திட்டங்களில் பங்கெடுக்க வேண்டும்.

பாதுகாப்பு பரிசோதகர்கள் தங்களைச் சுதந்திரமாகச் செயல்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும்.
அரசியல் தலைவர்கள் மற்றும்
மூத்த அதிகாரிகள், இந்தப் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.


இஸ்ரேலின் கொடூரத்தனங்கள் குறித்து
பேராசிரியர் சலீம் அவர்கள் கூறினார்:

“காசாவில் நடந்துவரும் இன அழிப்பு, 
இஸ்ரேலின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் மனிதாபிமான விரோத நடவடிக்கைகள் எல்லையற்ற கொடூரங்கள். 
பசிக்காக நின்றுள்ள மக்கள் மீது குண்டு வீசப்படுவது வரலாற்றில் நினைவுகூரப்படும் 
மனித நேயமற்ற குற்றம்.

மேலும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலும் சுதந்திர நாடுகளின் உள்நாட்டுச்  sovereignity மீதான தாக்குதலாக பார்க்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

“இந்த மோதல் சர்வதேச சட்டங்களை மீறுகிறது. 
சர்வதேச சமுதாயம் இனி உள்நோக்கு அரசியலை விட்டு விலகி உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மணிப்பூரில் தொடரும் வன்முறை குறித்து:

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தேசியச் செயலாளர் மௌலானா ஷஃபீ மதனீ கூறினார்:

“இம்பாலில் நடந்த தீவிர வன்முறைகள், 
தீ மூட்டுதல், 
காவல்துறையை வெல்லும் முயற்சிகள் — இவை எல்லாம் ஆயுதம் தூக்கும் குழுக்களின் ஆதிக்கத்தை காட்டுகின்றன.

அவர்களுக்கு அரசியல் ஆதரவு கிடைப்பது மிகக் கவலை அடையச் செய்கிறது.
தாய்மார்கள், பிள்ளைகள், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசியல் தலைவர்கள், 
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினார்.