News Channel

பத்திரிக்கை அறிக்கை

23 ஜூன் 2025

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திய தாக்குதல்களை கண்டித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மத்திய  ஆலோசனைக் குழு  
22 ஜூன் 2025 அன்று 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் 
சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி அவர்களின் தலைமையில் 
நடைபெற்றது.

கூட்டத்தின் முதல் நாளில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மத்திய ஆலோசனைக் குழு கூட்டம், 
ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஒருதரப்பு மற்றும் தாக்குதல்மிக்க நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறது.

மேலும்,
ஈரான் மக்களுடன் உறுதியான ஒற்றுமையையும் உறுதிபட தெரிவிக்கிறது.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் இந்த பிரச்சனை, உலகெங்கும் உள்ள சமாதானம்& நீதி விரும்பும் மக்களிடம் பெரும் கவலையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சூழ்நிலைக்குக் காரணமாக அமெரிக்காவின் அழுத்தத்தன்மையும், இஸ்ரேலின் விரிவாக்கக் கொள்கையும் நேரடியாகக் காரணமாக உள்ளன.

இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு, மேலும் மேற்கு நாடுகள் மேற்கொள்ளும் மெளனம் 
இந்தப் பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன.

ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்படும் குண்டுவீச்சுகள், இந்தப் பிராந்தியத்தை நீண்ட காலத்துக்கான ஒரு பேரழிவான போர் நோக்கி இட்டுச்செல்கின்றன.

மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் சுட்டிக்காட்டுவது என்னவெனில்
 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் சர்வதேச அமைப்புகள் இதுவரை வழங்கவில்லை. 
இதுபோன்ற சூழ்நிலையில், அமெரிக்கா ஈரான் மீது நடத்தும் தாக்குதல், உலக அமைதி மற்றும் நீதித் துறையின் மீதான மோசமான தாக்குதலாகும். 
இது மனிதத்திற்கே பேரழிவை உண்டாக்கக் கூடிய பயங்கர நடவடிக்கையாகும்.
இந்த வகை நடவடிக்கைகள் சட்டத்தையும், நெறிமுறையையும் மீறுவதுடன், மனித வாழ்வை பேரழிவுக்கு தள்ளக் கூடியவை என மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் கருதுகிறது.

இது குடிமக்கள் உயிரிழப்பு, அடிப்படை வசதிகள்,
மக்கள் இடம்பெயர்தல், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தி ஒரு பெரிய மனிதாபிமானமற்ற நெருக்கடியை உருவாக்கும் அபாயம் இருக்கிறது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை 
“தற்காப்புத் தாக்குதல்” 
எனக் கூறுவது, ஈரானின் பதிலடி நடவடிக்கைகளை “தீவிரவாதம்” எனப் பொருள் படுத்துவது போன்ற இரட்டை நிலைபாட்டை சபைகடுமையாக கண்டிக்கிறது. இந்த இரட்டை நிலைப்பாடுகள், உலக அமைதிக்கு மிகப்பெரிய அபாயமாக இருக்கின்றன.

இந்திய அரசிடம் மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் வலியுறுத்துவது:

உடனடியாக அமைதியை 
நிலைநாட்ட தூதரகங்கள் மூலமாக நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
பதற்றத்தை குறைக்கும் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட வேண்டும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நீண்ட காலமாக இருந்து வரும், நடுநிலைத்தன்மை, 
மூன்றாம் உலக நாடுகள் மீதான ஆதரவை உறுதியாக பேணவேண்டும்.

மேலும், 
மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் 
உலக நாடுகளை கீழ்கண்டவாறு அழைக்கிறது:

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இஸ்ரேல் கொடூரமாக நடத்தும் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆகியவற்றில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணுசக்தி மையங்கள் மற்றும் குடிமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடக்கும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.

முஸ்லிம் நாடுகள்
ஈரான் மீது இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வின் அடிப்படையில் செயல் பட வேண்டும்.
வெறும் கண்டனப் பிரகடனங்களை விட பெரிய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். 

சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்தும் வகையில் ஆகச் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள சமாதானவாதிகளிடமும் மத்திய ஆலோசனைக் குழு கூட்டம் அழைப்பு விடுக்கிறது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, 
ஈரான் மக்கள் மற்றும் பிற பிராந்தியப் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும். 
மேலும், உலக அமைதிக்காக தங்களுடைய குரலை உயர்த்த வேண்டும்.

வெளியிட்டவர்:
ஸல்மான் அஹ்மத்
தேசிய செயலாளர், 
ஊடகப் பிரிவு,
ஜமாஅத்தே இஸ்லாமி இந்த், தலைமையகம், 
நியூடெல்லி.