News Channel

பத்திரிக்கை அறிக்கை

பத்திரிக்கை அறிக்கை 

புதுடெல்லி-13 ஜூன் 2025 

ஈரானில் உள்ள உணர்திறன் மிக்க அணு உலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய மோசமான தாக்குதல்களை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) 
அகில இந்திய தலைவர் 
சையத் சஆதாதுல்லாஹ் ஹுசைனி அவர்கள் 
கடுமையாகக் கண்டித்துள்ளார்.  

ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் அவர் கூறியதாவது:  
"ஈரான் இஸ்லாமிய குடியரசின் இறையாண்மை மீது இஸ்ரேல் மேற்கொண்ட வெளிப்படையான,  இந்தத் தாக்குதல், பன்னாட்டு சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கடுமையான மீறலாகும். 

எந்தவொரு பன்னாட்டு ஆணையமோ, 
உடனடி அச்சுறுத்தலோ இன்றி, 
ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் மையப்பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் இராணுவ இலக்குகள் (நத்தான்ஸ் அணு வளாகம் உட்பட) தாக்கப்படுவது ஒரு பொறுப்பற்ற போர் நடவடிக்கையும்,
பயங்கரவாதமுமாகும். 
ஈரானிய இராணுவத் தலைவர்கள், 
அணு விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆபத்தான இராணுவ ஆக்கிரமிப்பு மேற்கு ஆசியாவில் வன்முறையைத் தூண்டி உலகளாவிய நெருக்கடிக்கு வழிவகுக்கும். 
சக்திவாய்ந்த நாடுகளின் மௌனமும் குற்றத்தொடர்பும் வருந்தத்தக்கது.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் ஈரான் அணுத் திறனைக் குறித்து தரப்பட்ட நியாயப்படுத்தல்களைச் சுட்டிக்காட்டி, 
தலைவர் சஆதத்துல்லாஹ் ஹுசைனி தெரிவித்ததாவது:  
இத்தகைய ஒரு தரப்பு குற்றச்சாட்டுகள் புதியவையல்ல,
சான்றுகளும் இல்லை. 

ஈரான் தனது அணுத்திட்டம் அமைதி கரமானது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 
IAEA போன்ற பன்னாட்டு நிறுவனங்களே இதற்கு முடிவு செய்ய வேண்டியவை.
இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்படும் நாடுகள் அல்ல. 

ஈரானிய இராணுவத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளைக் கொலை செய்தது மனித உரிமை மற்றும் பன்னாட்டு விதிமுறைகளின் கடுமையான மீறலாகும். 
இச்சூழ்நிலையைத் தணிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் உலக சமூகம் உடனடி நடவடிக்கை எடுத்து இஸ்ரேலை இதற்கான பொறுப்பை ஏற்கச் செய்ய வேண்டும்.

இதற்கு உலகளாவிய தலையீடும், தாக்குதல் நடத்திய நாட்டின் மீதான தடைகளும் அவசியம். செயல்படத் தவறினால்
பன்னாட்டு உறவுகளில் தண்டனையின்மைக்கு வழிவகுக்கும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
தலைமையகம் 
புது தில்லி.