News Channel

பத்திரிக்கை அறிக்கை

பத்திரிக்கை அறிக்கை
29.05.2025

அசாமில் மாநிலத்தில் 
'பாதுகாப்பற்ற' பகுதிகளில் 
ஆயுத அனுமதி வழங்கும் அரசின் முடிவுக்கு 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் எதிர்ப்பு

புதியதில்லி:
அசாம் அரசு 'பாதுகாப்பற்ற' மற்றும் 'தொலைவிலுள்ள' பகுதிகளில் வசிக்கும்
'மூல நிவாசிகள் மற்றும் பாரம்பரிய குடிமக்களுக்கு
'ஆயுத அனுமதிகளை வழங்க முடிவு செய்திருப்பதை, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத்தலைவர் மாலிக் முஹ்தசிம் கான் கடுமையாக கண்டித்துள்ளார்.

“இந்த முடிவு சமூகத்தில் வேறுபாடுகளை அதிகரிக்கும், மற்றும் சட்ட ஒழுங்கை பாதிக்கும். 'மூல நிவாசிகள்' என்று யாரைக் குறிப்பிடுகிறார்கள் என்பதில் தெளிவில்லை. 
இது சமூகங்களை புறக்கணிக்கவும், மிரட்டவும் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.”

“அசாம் அரசு அண்மையில் எடுத்த பிற நடவடிக்கைகளும் கவலையை ஏற்படுத்துகின்றன. பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களை 'வெளிநாட்டவர்கள்' என்று கூறி, முறையான விசாரணை இல்லாமல் கைது செய்வது, சமூகங்களுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்துவது போன்றவை அடங்கும். 
இது அச்சத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாக்குகிறது. காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை நம்பாமல், 
மக்கள் கையில் ஆயுதம் கொடுப்பது சமூகத்திற்கே ஆபத்தானது.”

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அரசின் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறது.

பாதுகாப்பு பிரச்சனைகளை தீர்க்க, 
எல்லா சமூகங்களுடனும் ஆலோசனை நடத்த வேண்டும். வன்முறையையும், பாகுபாடுகளையும் தூண்டும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

சமூக அமைப்புகள், 
மனித உரிமை இயக்கங்கள் மற்றும் நீதிமன்றம் இந்த முடிவை கவனத்தில் கொண்டு, 
அசாமில் உள்ள அனைத்து சமூகங்களின் உரிமைகளும் பாதுகாப்பும் உறுதி படுத்த வேண்டும் என 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக் கொள்கிறது.

வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசியச் செயலாளர், 
ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமையகம்
புதியதில்லி.