பத்திரிகைச் செய்தி
'வக்ஃப் திருத்தச் சட்டம் 2025' ஐ எதிர்த்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
புது தில்லி:
"வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025"அரசியலமைப்பின் படி செல்லுபடியாவதை எதிர்த்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது.
ஜமாஅத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் சலீம் பொறியாளர், நிர்வாகிகள் மௌலானா ஷாஃபி மதானி மற்றும் இனாம் உர் ரஹ்மான் ஆகியோர் சேர்ந்து மனு (முஹமது சலீம் & ORS (மனுதாரர்) வெர்சஸ் இந்திய யூனியன் (பிரதிவாதி) தாக்கல் செய்துள்ளனர்.
இப்புதிய சட்டம் குறித்து கடும் அதிருப்தி இம்மனுவில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தங்கள் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், சமயம், தொண்டு, மற்றும் சமூகம் சார்ந்த இந்திய வக்ஃப்களின் தனித்தன்மையை சீர்குலைப்பதாகவும் இம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதிய திருத்தங்கள் இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 15, 16, 25, 26, மற்றும் 300A ஆகியவற்றை மீறுவதை சுட்டிக்காட்டி, அரசியலமைப்பிற்கு விரோதமான இத்திருத்தங்களை ரத்து செய்ய இம்மனு கோருகிறது.
மனுவில் எழுப்பப்பட்ட முக்கிய பிரச்னைகள்:
1. அடிப்படை உரிமைகள் மீறல்:
திருத்தப்பட்ட சட்டம் வக்ஃபின் வரையறை மற்றும் கட்டமைப்பையே மாற்றுகிறது, வக்ஃபினை யார் உருவாக்க முடியும், அதை எவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பதில் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
உதாரணமாக, வக்ஃப் செய்பவர் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தை கடைப்பிடித்திருப்பதை நிரூபிக்க வேண்டும் என்று புதிய சட்டத்திருத்தம் கோருகிறது - இஸ்லாமிய சட்டத்தில் அடித்தளமில்லாத தெளிவற்ற மற்றும் தன்னிச்சையான விதிமுறை.
பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல உண்மையான பங்களிப்பாளர்கள் தங்கள் மதச் சுதந்திரத்தைப் பயன்படுத்திலிருந்து இது தவிர்க்க வைக்கலாம். மத சுதந்திரம் மற்றும் பாகுபாட்டிற்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்யும் பிரிவுகள் 25 மற்றும் 15 ஐ நேரடியாக மீறுகிறது.
2. வக்ஃப் வாரிய சுயாட்சி பறிப்பு:
தேர்ந்தெடுக்கப்பட்ட வக்ஃப் வாரியங்களை கலைத்து, அவற்றில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட செயல்பாட்டாளர்கள்,
முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் இஸ்லாமிய நீதித்துறை பற்றிய தேவையான அறிவு இல்லாத அதிகாரிகளால் புதிய சட்டம் நிரப்பும். இது பிரிவு 26-ன்படி, தங்கள் சொந்த மத நிறுவனங்களை நிர்வகிக்கும் சமூகத்தின் உரிமையை அடிப்படையில் மீறுகிறது. மேலும், இந்தத் திருத்தம் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது, இதன் மூலம் மதப் பிரதிநிதித்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
3.வக்ஃப் சொத்துக்களை நியாயமற்ற முறையில் கையகப்படுத்துதல்:
ASI- பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்குள் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களையும், அவற்றின் வரலாற்று மத முக்கியத்துவத்தைப் பொருட்படுத்தாமல், செல்லாததாக அறிவிக்க இச்சட்டத்தின் பிரிவு 3D அவசரமாகவும் தன்னிச்சையாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதி, வக்ஃப் சொத்துக்களுக்கான பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1958 இன் பிரிவு 6 ஐ அடிப்படையில் ரத்து செய்கிறது, இது முஸ்லிம் மத நினைவுச்சின்னங்கள் மட்டுமே அவற்றின் மதத் தன்மையையும், நிர்வாகத்தையும் பறிக்கப்பதற்கான ஒரு பாரபட்சமான கட்டமைப்பை உருவாக்குகிறது.
மேலும், வரம்புச் சட்டம்,
1963 ஐப் பயன்படுத்தி ஆக்கிரமித்த வக்ஃப் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் அநீதியாக உடைமையாக்கிக் கொள்ள உரிமை கோர இந்தச் சட்டம் உதவுகிறது, இது முஸ்லிம் தொண்டு சொத்துக்களை மேலும் இழக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
4. சமுதாய பங்களிப்பை புறக்கணித்தல்:
பரந்த அளவிலான மற்றும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை திருத்தங்களில் இருந்தபோதிலும், அவை அவசரமாக நிறைவேற்றப்பட்டன. பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது, நடைமுறை விதிகளை நீக்கி விட்டு பிரிவுகள் 3D மற்றும் 3E போன்ற கடைசி நிமிட மாற்றங்கள் சேர்க்கப்பட்டன. முக்கியமாக, கூட்டு நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜரான JIH நிர்வாகிகள் உட்பட சமுதாய மக்கள் கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பினர்.
அவை இறுதிச் சட்டத்தில் புறக்கணிக்கப்பட்டன.
பயனாளர்கள் பங்களிப்பை அப்பட்டமாக புறக்கணித்து ஜனநாயகக் கொள்கைகளையும், பங்கேற்பு நிர்வாகத்தின் ஆன்மாவையும் மீகிறது.
கூடுதல் சட்ட வாதங்கள்:
இந்தச் சட்டம் ‘பயனரால் வக்ஃப்’ என்ற கருத்தை செல்லாததாக்குகிறது.
இது ராம ஜென்மபூமி-பாபர் மசூதி தீர்ப்பில் உறுதிப்படுத்தப்பட்ட நீதித்துறை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை. இதன் மூலம் எழுத்துப் பூர்வமானப் பத்திரங்கள் அல்லது ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் வரலாற்று வக்ஃப் சொத்துக்களை அழிக்கிறது. இது அரசாங்க வருவாய் பதிவுகளை (உரிமைகள் பதிவு) உரிமையின் உறுதியான சான்றாக எடுத்துக்காட்டுகிறது.
அத்தகைய சான்றுகள் உரிமையை நிர்ணயிப்பவை அல்ல குறிப்பாக வக்ஃப் சொத்துக்களின் விஷயத்தில் என்று நீதித்துறையின் முந்தைய மேற்கோள் உள்ளது.
அரசாங்க பதிவுகளை மட்டும் அல்லாது, சமூக பயன்பாடு மற்றும் வரலாற்று தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு சமய அறக்கட்டளைகள் மதிப்பிடப்பட வேண்டும் என்று வாதிட லால் ஷா பாபா தர்கா, ஷேக் யூசுப் சாவ்லா மற்றும் ராம்ஜாஸ் அறக்கட்டளையின் தீர்ப்புகள் எடுத்து கொள்ளப்படுகின்றன.
வக்ஃப் என்பது இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் இந்திய பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இது தொண்டு, கல்வி மற்றும் சமூக நலனுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மீண்டும் வலியுறுத்துகிறது.
வக்ஃபின் சமய மற்றும் சமூக தனித்தன்மையை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் அரசியலமைப்பிற்கு விரோதமானது மட்டுமல்ல, தார்மீக ரீதியாகவும் அநீதியானது. தன்னிச்சையாக வக்ஃப் பாதுகாப்பை ஒழிப்பதற்கு எதிராக குரல் எழுப்பவும்,
அரசியலமைப்பு மீறலுக்கு எதிராக ஒற்றுமையுடன் நிற்கவும் குடிமைச் சமூகம், சட்ட வல்லுநர்கள், மற்றும் பன்முகத்தன்மை, நீதியை நேசிக்கும் அனைத்து குடிமக்களையும் ஜமாஅத் அழைக்கிறது.
வெளியீடு:
சல்மான் அஹ்மத்
தேசிய உதவிச் செயலாளர், ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தலைமையகம்.
புது தில்லி